அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

கொள்ளை கொள்ளும் அழகை எப்படி கேரளத்து பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது புதிரான கேள்வியாக உங்கள் மனதில் இருந்தால், அதற்கான பதில்!….

இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. எல்லா மாநிலத்து பெண்களை காட்டிலும் கேரளாவில் உள்ள பெண்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அழகிலும், குணத்திலும், பண்பிலும் கேரளத்து பெண்கள் சற்று மற்ற மாநிலத்து பெண்களை காட்டிலும் மாறுபட்டே இருக்கின்றனர். கேரளாவை கடவுள்களின் நிலம் என்றே அழைப்பார்கள்.

இப்படிப்பட்ட அழகிய பெண்கள் உள்ள இந்த மாநிலத்தை தேவைதைகளின் மாநிலம் என்றே அழைக்கலாம். அதே போன்று சமீப காலமாக கேரளத்து படங்களின் மீதும், அதில் நடிக்கும் கதாநாயகிகள் மீதும் தனிவித ஈர்ப்பு மற்ற மாநிலத்தவர்களுக்கு இருக்க தான் செய்கிறது.

கொள்ளை கொள்ளும் அழகை எப்படி கேரளத்து பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது புதிரான கேள்வியாக உங்கள் மனதில் இருந்தால், அதற்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். கேரளத்து பெண்கள் இத்தனை அழகுடன் வலம் வருவதற்கு மிக முக்கிய காரணம் இந்த 2 பொருட்கள் தானாம். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.

kerALA

இயற்கையே அழகு!

அதிக அளவிலான இயற்கை சூழல் தான் கேரள மக்களின் இந்த அளவற்ற அழகிற்கு முக்கிய காரணம் என சொல்கின்றனர். பலவித அழகு பொருட்களை வைத்து தான் கேரளா பெண்கள் தங்களை ஓவியமாக தீட்டி கொள்கின்றனர். இவர்களின் பெரும்பாலான சிகை அலங்கார பொருட்கள் கூட இயற்கை பொருட்கள் கொண்டவையாக உள்ளது.

ஆமணக்கு எண்ணெய்

சருமமும், தோலும் எப்போதுமே ஈர்ப்பதுடன் இருக்க ஆமணக்கு எண்ணெய்யை பல கேரளத்து பெண்கள் பயன்படுத்துவர்களாம். இதில் உள்ள வைட்டமின்கள் நேரடியாகவே செல்களை புத்துணர்வூட்டி சிறப்பான அழகை தருகிறதாம்.

குளிர்ந்த பால்

பார்க்க எப்போதுமே செழிப்பாக இருக்கவும், ஒரு வித வெண்மையை தருவதற்கும் குளிர்ந்த பால் உதவுகிறதாம். இவை முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து அழகான முகத்தை பெற்று தருமாம்.

இயற்கை சந்தனம்

பூமியில் இருந்து கிடைக்கப்படும் ஒரு வகை களிமண் தான் முல்தானி மட்டி. இதுவும் பெரும்பாலான கேரளத்து மக்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருள் தான். இதை இயற்கை சந்தனத்துடன் சேர்த்து பயன்படுத்துவார்களாம். இவை முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நச்சு பொருட்கள் போன்றவற்றை தடை செய்து விடும்.

3 கலவை

பெரும்பாலான கேரளத்து பெண்கள் இந்த முறையை பயன்படுத்தி தான் முக அழகை எளிதாக பெறுகின்றனர். இது முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி, மென்மையான முகத்தை பெற உதவும். இதற்கு தேவையானவை… நல்லெண்ணெய் 2 ஸ்பூன் கோதுமை மாவு 1 ஸ்பூன் மஞ்சள் பொடி 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் கோதுமை மாவை மஞ்சளுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாகும். இதுவும் கேரளத்து பெண்கள் கடைபிடிக்கும் சில விஷயங்களில் மிக முக்கியமான ஒன்றாம்.

கேரளா உணவு

கேரளத்தில் உள்ளோர் தனி வகையான அழகை ஒருவதற்கு அவர்களின் உணவு முறையும் மிக முக்கிய காரணமாக உள்ளது. கேரளா அரிசியில் அதிக மூலிகை தன்மை உள்ளது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான உடல் அமைப்புடன், நோய்கள் இல்லாமலும் இவர்கள் இருப்பார்களாம்.

மிக மிக முக்கியமானது!

கேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்க கூடிய அழகை பெறுவதற்கு இந்த ஒரே ஒரு பொருள் தான் மிக முக்கிய காரணம். அது தான் தேங்காய் எண்ணெய். இவர்கள் முகம், தலை, கை, கால், பாதம் முதலிய பகுதிகளில் தேங்காய் எண்ணெய்யை தடவி கொண்டு குளிப்பார்களாம். இது தான் அவர்களின் ஈடு இணையற்ற அழகிற்கு முதன்மையான காரணம்.

காரசார உணவுகள்

கேரளா மக்கள் பெரும்பாலும் காரசார உணவுகளை சாப்பிடுவதால் இது உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது. இவர்களின் வாசனை நிறைந்த காரசார உணவுகளுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். ஆக, சீரான உணவு முறை, ஆரோக்கியமான இயற்கை சூழல், நிம்மதியான வாழ்க்கை முறை…இப்படிப்பட்டவை தான் கேரளா மக்களை அழகுடனும் பொலிவுடனும் வைக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button