28.6 C
Chennai
Saturday, May 18, 2024
246903026dbcfff3252b3c86927841dd2a682eef7
பெண்கள் மருத்துவம்

உங்களுக்கு தெரியுமா கருத்தடைக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை – வந்துவிட்டது கருத்தடை ஆபரணம்!

க ருத்தடைக்கு மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் சாதனங்கள் என பல்வேறு கருத்தடை முறைகள் இருந்தாலும் கருத்தடைக்கு புதிதாக ஹார்மோன் அணிகலன்களைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கருத்தடை ஆபரணம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கருத்தரிப்பதைத் தடைசெய்ய ஹார்மோனை கடிகாரம், காதணி, மோதிரம் போன்ற அணிகலன்கள் வழியே உடலுக்குள் செலுத்தும் முறையைக் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள். கடிகாரத்தின் பின்புறம், மோதிரத்தின் உட்புறம், காதணியின் பின்புறம் என அணிகலன்கள் உடலோடு ஒட்டியிருக்கும் இடத்தில் ஹார்மோன் பட்டையை (Patches) ஒட்டிவைத்துவிடுவார்கள்.

1287286853451cc4168350bd86c61fab7aa1132cd 1146356709

இதுதொடர்பாக, ‘ஜர்னல் ஆப் கன்ட்ரோல்டு ரிலீஸ்’ (Journal of controlled release) பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், “தொடக்க நிலையில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் கருத்தடை ஆபரணத்திலிருந்து ஹார்மோன்கள் உடலுக்குள் சென்று கருத்தடை செய்வதை உறுதி செய்திருக்கிறோம். ஆனால், இதுவரை இந்த ஆராய்ச்சி மனிதர்களுக்குச் செய்யப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பேராசிரியர்கள், “பல்வேறு கருத்தடை வழிமுறைகள் தற்போது வழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், எத்தகைய வழிமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் வழக்கமாகவே தினமும் ஆபரணங்களை அணியும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். கருத்தடைக்கான எளிய வழிமுறையாக இது இருக்கும். இதன்மூலம் திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கருத்தடை ஆபரணத்தை முதலில் பன்றியின் காதில் மாட்டி ஆய்வு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். விலங்குகளின் உடலில் 16 மணிநேரம் இந்தக் கருத்தடை ஆபரணத்தை அணிவித்து சோதனை மேற்கொண்டனர். விரைவில் மனிதர்களிடமும் சோதனை செய்யப்படும். இந்த முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் வலி மிகுந்த கருத்தடை அறுவை சிகிச்சை, மாத்திரைகள் மற்றும் கருத்தடை உபகரணங்களைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காது. ஆக, இனிவரும் காலங்களில் கருத்தடை முறைகள் எளிமையாக்கப்படும்.

Source :vikatran

Related posts

இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்பு அதிகம்

nathan

அதிக நாட்கள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

nathan

பெண்களுக்கு சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள்: தென்படும் அறிகுறிகள்

nathan

பெண்களுக்கு அந்த இடத்தில் ஏற்படும் தொற்றுகள்

nathan

கடின வேலையால் கருவும் தாமதமாகும்!

nathan

பெண்களுக்கு எப்போது இறுதி மாதவிடாய் தொடங்குகிறது

nathan

பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள்  உடல் பருமன் பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள். 

nathan

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவரா? கர்ப்பம் தரிக்க முயல்கிறீர்களா?

nathan

பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன!

sangika