உடல் பயிற்சி

பெண்களின் தோள்பட்டை, கைகளுக்கான பயிற்சி

பெண்களின் தோள்பட்டை, கைகளுக்கான பயிற்சி

பெண்கள் கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.நெஞ்சை பந்தின் மேல் அமுக்குதல் :

இந்த பயிற்சியை ஆரம்பிக்க மேல்புற முதுகு மற்றும் தலையை பந்தின் மீது வைத்திடுங்கள். அதே போல் உடம்பின் கீழ் பகுதியை தாங்க கால்களை தரையில் வைத்து ஒரு பாலத்தின் வடிவில் இடுப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். முழங்கைகளை மடக்கி உடல் எடையை நெஞ்சுக்கு கொண்டு வாருங்கள். எடையை கூரையை நோக்கி அழுத்தி, உங்கள் நெஞ்சு தசைகளை அழுத்தி, உங்கள் கைகளை நேராக நீட்டிக் கொள்ளுங்கள். இந்த உடற்பயிற்சியில் ஈடுபட்டால் ட்ரைசெப்ஸ், தோள்பட்டைகள், நெஞ்சு, மைய தசைகள் மற்றும் கால்கள் வலுவடையும்.

டம்ப் பெல் பென்ட் ஓவர் ரிவர்ஸ் ப்ளைஸ் :

இந்த உடற்பயிற்சி கைகள், தோள்பட்டைகள் மற்றும் முதுகு பக்கத்தை வலுவடையச் செய்யும். தோள்பட்டையின் அகலத்திற்கு கால்களை விரித்து தரையில் நின்றபடி இடுப்புக்கு கீழ் குனிந்து, உடல் தரைக்கு இணையான நிலையில் இருக்கும்படி இதனை ஆரம்பியுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வளையுங்கள்.

இரண்டு கைகளிலும் டம்ப் பெல்ஸ்களை வைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் நேராக தரையை நோக்கி நீட்டிடுங்கள். நேராக வைத்திருக்கும் கைகளை மெதுவாக உயர்த்தி வானத்தை நோக்கி மேலே தூக்குங்கள். கைகள் தோள்பட்டைக்கு நேரான நிலையில் செல்லும் வரை, அதனை உயர்த்துங்கள். பின் கைகளை மெதுவாக கீழிறக்குங்கள். இதனை சிலமுறை தொடர்ந்து செய்யுங்கள்.

Related posts

எந்த காரணங்களுக்காக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கலாம்

nathan

நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்

nathan

பைக் ஓட்டினா… பயிற்சி செய்யுங்க!

nathan

அப்டாமினல் க்ரன்சஸ்

nathan

அடிவயிற்றில் வலிமை தரும் பயிற்சி

nathan

10 நாட்களில் உடல் ‘ஸ்லிம்மாக’ வேண்டுமா? இயற்கையான உணவு உங்களுக்காக!

nathan

உயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள்

nathan

வொர்க் அவுட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

nathan

ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் கணேச முத்திரை

nathan