31.4 C
Chennai
Tuesday, May 28, 2024
vallarai
தலைமுடி சிகிச்சை

தலைமுடியை அடர்த்தியா நீளமாக வளரச் செய்யும் வல்லாரை கீரை…

நமது இந்திய பராம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகமாக பயன்படுத்தி வரும் தாவரம் தான் இந்த பிராமி. இது பாகோபா மோனிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த இயற்கை மூலிகை நிறைய விதங்களில் பயன்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த பிராமி நினைவாற்றலை அதிகரித்தல், கூந்தல் வளர்ச்சிக்கு என்று நிறைய வகைகளில் பயன்படுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சீமர் நோய், அனிஸ்சிட்டி, கவனக் குறைவு நோய், அழற்சி போன்ற நோய்களுக்கும் சிறந்தது. இது மன அழுத்தத்தை குறைக்கும் டானிக் என்றே கூறலாம்.

vallarai

வல்லாரை பொடி

இந்த தாவரத்தை நிறைய பேர்கள் மன நோய், முதுகு வலி, மூட்டு வலி மற்றும் பாலியல் செயல்திறன் சிகச்சைக்கு கூட பயன்படுத்துகின்றனர். மேலும் பிராமி கூந்தல் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த ஒன்று. இருப்பினும் இந்த மூலிகை கூந்தல் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி இங்கே பார்க்க உள்ளோம்.

எப்படி பயன்படுத்துவது?

இது கூந்தல் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுவதோடு மூளையில் உள்ள கெமிக்கல்களை தூண்டி மூளையை கூர்மையாக வைக்க உதவுகிறது. பிராமி வேர்க்கால்களை வலிமையாக்கி முடியை வலிமையாக்குகிறது. எனவே இது முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. பிராமி பவுடரை நேச்சுரல் முடி வளர்ச்சி மருந்தாக கூட பயன்படுத்தி வரலாம். பலன் கிடைக்கும்.

எப்படி கலக்க வேண்டும்?

இந்த பிராமி இலைகள் அருகில் உள்ள மார்க்கெட்டில் கூட கிடைக்கும். இதை உலர்த்தி காய வைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் புல்லின் பச்சை வாசனை மாதிரி இருக்கும். வேண்டும் என்றால் இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளுங்கள்.

எப்படி தேய்க்க வேண்டும்?

மேலும் இந்த பிராமியுடன் நெல்லிக்காய், துளசி மற்றும் வேப்பிலை போன்றவற்றை கூட சேர்த்து கொள்ளலாம். பிராமியுடன் இந்த மாதிரியான பவுடர் அல்லது ஆயில் சேர்த்து பயன்படுத்தும் போது கூடுதல் நன்மை கிடைக்கும் என்பதை மறவாதீர்கள். இந்த பேஸ்ட்டை தலை மற்றும் கூந்தலில் தடவி 45-50 நிமிடங்கள் காய வையுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பயன்கள்

பிராமி கூந்தலை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்க்கிறது. பிராமி பவுடர் பிளவுபட்ட நுனிகளை சரி செய்து சில வாரங்களில் நலல மாற்றத்தை தருகிறது.

மயிர்க்கால்களில் உள்ள பாதிப்பை தடுத்தல், வேர்க்கால்களுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுத்து முடி உதிர்வை தடுத்தல், அடர்த்தியான நீளமான கூந்தலாக மாற்றுதல், பொடுகு மற்றும் அரிப்பு, வறண்ட தலை சருமம் போன்ற பாதுகாப்பை தருகிறது.

எனவே இனி உங்கள் கூந்தல் அழகுக்கு கண்ட கண்ட எண்ணெய்களை தேய்க்காமல் பிராமி எண்ணெய் தேயுங்கள். நன்மைகள் கிடைக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பீர்க்கங்காயை அரைச்சு தேய்ச்சா நரைமுடியே வராது…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

nathan

அடர்த்தியான கூந்தல் கிடைக்க கருவேப்பிலை, சீரகத்தை எப்படி உபயோகிக்க வேண்டுமென தெரியுமா?

nathan

கூந்தலை பாதுகாக்க எளிய வழிகள்

nathan

முடி அடர்த்தியாக வளர……இய‌ற்கை வைத்தியம்

nathan

உங்களுக்கு பேன் தொல்லை இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முடி உதிர்வதை தடுக்க குறிப்பு | Tamil Beauty Tips

nathan

வெயில் காலத்தில் தலையை பராமரிக்கும் விதம் !அழகின் ரகசியம்!!

nathan

தெரிஞ்சிக்கங்க… முடி கொட்டுவதைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம்?

nathan