mark
முகப் பராமரிப்புஅழகு குறிப்புகள்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி தெரியுமா..?

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மிக எளிதாக அகற்ற பல முறைகள் உள்ளது. அதுவும் குறுகிய நாட்களிலேயே மிக எளிதாக இந்த பிரச்சனையாய் தீர்க்க முடியும்.

ஒரு சிலருக்கு முகத்தில் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் சிறிய திரு குறு போன்று முகத்தின் தோன்றும். இதனால் முக அழகு பாதிக்கும். இது போன்ற பிரச்சனை, முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பதால், ஏற்பட வாய்ப்பு உள்ளது.

mark

இதற்கு என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்..

பட்டை மற்றும் தேன் இவை இரண்டும் கலந்த கலவையை, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர, விரைவில் அந்த கரும்புள்ளிகள் நீங்கும்.

செய்முறை :

1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும். ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இதேபோன்று, கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில வழிகள்:

1 டேபிள் ஸ்பூன் உப்பை சிறிய அளவு நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது போன்ற, பல முறைகளை நடைமுறைப்படுத்தி, கரும்புள்ளிகளை நீக்கலாம்.

மேற்குறிப்பிட்ட சில விஷயங்களில் ஏதாவது ஒன்றை தினமும் செய்து வந்தால், இரண்டே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைத்து பொலிவாக காணப்படும்.

Related posts

சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு குங்குமப் பூ!….

sangika

திடுக்கிடும் தகவல்கள்! 4 வயது மகனின் கழுத்தை இறுக்கி கொன்ற தாய்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்.. முக அழகிற்கு…

nathan

உங்களுக்கு விரைவில் தடிமனான புருவம் கிடைக்க டாப் 7 கைவைத்தியங்கள்!! தூங்கறதுக்கு முன்னாடி இத செய்ங்க!!

nathan

சிவந்த நிறத்தில் ஜொலிக்க.

nathan

உங்க சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த விஷயங்கள மறக்காம செய்யணுமாம்…

nathan

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika

வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.

nathan

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan