27.3 C
Chennai
Sunday, May 19, 2024
மருத்துவ குறிப்பு

தாமதமாகும் மாதவிடாய் சுழற்சியை சரிசெய்யும் உணவுகள்

தாமதமாகும் மாதவிடாய் சுழற்சியை சரிசெய்யும் உணவுகள்

நிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது. சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சற்று தாமதமாக ஏற்படும். ஆனால் அந்த தாமதம் சிலருக்கு 2 மாதங்கள் தள்ளிக் கூட போகும்.இத்தகைய பிரச்சனையால், பிற்காலத்தில், அவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, தேவையில்லாமல் மருந்துக்கள் உட்கொள்வது போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன.

அதிலும் அவ்வாறு தாமதமாக மாதவிடாய் சுழற்சி நடைபெறும் போது, சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தப் போக்கு ஏற்படுவதோடு, கடுமையான வயிற்று வலியும் ஏற்படும்.

எனவே இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கவும், தாமதமான மாதவிடாய் சுழற்சியை தடுக்கவும், ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்க்கலாம்..

* சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும

* காய்கறிகள் தினமும் உணவை சாப்பிடும் போது, அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரைகள், கத்திரிக்காய் போன்றவை மிகவும் சிறந்தவை. இவை சீரான மாதவிடாய் சுழற்சியை நடைபெறச் செய்யும

* நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

* எள் சாப்பிட்டாலும், சீரான மாதவிடாய் சுழற்சியை பெறலாம். எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், அவை உடல் வெப்பதை சற்று அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். சோயா பால் சாப்பிட்டாலும், மாதவிடாய் சுழற்சி தவறாமல் நடைபெறும்.

* முட்டையை வேக வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

* தினமும் ஒரு டம்ளர் சிவப்பு அல்லது பச்சை நிற திராட்சை ஜூஸை குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனையை தடுக்கலாம்.

Related posts

இப்படி இருந்தால் ஆபத்து? பச்சை உருளைக்கிழங்கு நஞ்சா?

nathan

பெண்கள் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவிட என்ன காரணம்

nathan

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா உணவில் பெருங்காயம் பயன்படுத்தினால் ‘பெரும் காயம்’ கூட குணமாகுமாம்!!!

nathan

பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ் வாதநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை

nathan

அதிகாலை நேரத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஏன்? தெரிஞ்சிக்கங்க…

nathan

தூக்க-விழிப்பு கோளாறுகள் (Sleep-Wake Disorders)

nathan

குடும்பம் என்றால் பிரச்சினைகள் வருவது சகஜம்தான்

nathan