இயற்கையாக சருமத்தின் கருமையை போக்க உதவும் மாம்பழ பேஸ் பேக்

மாம்பழம் சுவையானது மட்டுமில்லை அதில் சருமத்திற்கு தேவையான சத்துகளும் இருக்கிறது. இதை முகத்திற்கும் பயன்படுத்தலாம். மாம்பழத்தை வைத்து இயற்கையாக சருமத்தின் கருமையை போக்க உதவும் சில பேஸ் பேக்குகளை விரிவாக பார்க்கலாம்.

மாம்பழப் ஃபேஸ் பேக் (Mango pulp face pack)

மாம்பழத்தின் சதைப் பகுதியை எடுத்து முகத்தில் போட்டு 5 நிமிடம் முகத்தில் கையால் தடவிக் கொண்டேயிருங்கள். பின்பு 5 நிமிடம் ஊறவைத்த பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இது உதவும். சிறந்த பலனை பெற வாரத்திற்கு மூன்று முறைகள் செய்யுங்கள்.

மாம்பழம் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக் (Mango and Besan face pack)

இந்த குறிப்பிட்ட ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தின் கருமையை போக்க சிறப்பாக உதவும். இந்த ஃபேஸ் பேக் செய்யும் முறை, நன்கு பழுத்த மாம்பழத்தின் சதை, 2 டீஸ்பூன் கடலை மாவு, ½ டீஸ்பூன் தேன் மற்றும் சில பாதாம்கள். முதலில் மாம்பழத்தின் சதையை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் கடலை மாவு, ½ டீஸ்பூன் தேன் மற்றும் சில பாதாம்களை போட்டு இவை பேஸ்ட் போன்ற திக்காக வரும் வரை நன்றாக கலக்க வேண்டும். பின்பு மெதுவாக முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். இரண்டு முறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டு முடிவுகளை பாருங்கள்.

மாம்பழம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்(Mango and curd face pack)

எண்ணெய் சருமத்தை உடையவரா நீங்கள் இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு ஏற்றது. மாம்பழத்தின் நன்மைகளுடன் இதில் தயிர் மற்றும் தேனின் நன்மையும் இருக்கிறது. மாம்பழத்தின் சதை 1 டீஸ்பூன் தயிர், தேன் மற்றும் 1 டீஸ்பூன் முதலியவற்றை திக்காக கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

Leave a Reply