மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் 8 யோகாசனங்கள்!!!

யோகாசன நிலைகள் மற்றும் சுவாசிக்கும் நுட்பங்களின் வழியாக முழுமையான வாழ்க்கையை வாழ உதவும் பழமையான முறை தான் யோகா என்பதாகும். அதிலும் ஒற்றைத் தலைவலியிலிருந்து எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நிவாரணம் பெற உதவும் என்பது தான் யோகாவின் சிறப்பாகும்.

இந்த எளிமையான யோகாசனங்களை ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் செய்து வந்தால், நமது உடல் ஒற்றைத் தலைவலியின் தாக்குதல்களிலிருந்து தப்பிப் பிழைக்கும். சரி, இப்போது ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் யோகாசனங்களைப் பார்ப்போமா!!!

ஹஸ்டபாதாசனா (Hastapadasana)

முன்பக்கம் சாய்ந்தவாறு நிற்கச் செய்யும் இந்த யோகாசன நிலை நரம்பு மண்டலத்தை தூண்டி விட்டு இரத்தம் கிடைப்பதை அதிகப்படுத்தவும் மற்றும் மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.

சேது பந்தாசனா (Setu Bandhasana)

நமது உடலின் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும், மனதை ஓய்வாக வைத்திருக்கவும், மூளையை அமைதிப்படுத்தி, பயத்தை குறைக்கவும் உதவும் ஆசனமாக சேது பந்தாசனா உள்ளது. இந்த ஆசனத்தைச் செய்வதன் மூலமாக உங்களுடைய மூளைக்கு இரத்தம் விரைந்து செல்வதால். வலியிலிருந்து நிவாரணம் உடனடியாக கிடைக்கிறது.

பாலாசனா (Balasana)

குழந்தையைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும் இந்த யோகாசனம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மிகச்சிறந்த ஆசனமாகும். இடுப்பு, தொடைகள், முழங்கைகள் ஆகியவற்றை மென்மையாக நீட்டச் செய்து, மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் களைப்பிலிருந்து நிவாரணம் தரவும் இந்த ஆசனம் உதவுகிறது. இந்த ஆசனம் நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்துவதால் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் தரவும் உதவுகிறது.

மர்ஜாரியாசனா (Marjariasana)

பூனை போல உடலை வளைத்து நீட்டுவதால் இரத்த ஓட்டம் மேம்படும், மனம் ஓய்வு நிலைக்கு வரும், மன அழுத்தம் வெற்றி காணப்பட்டு, சுவாசம் நல்ல நிலைக்கு வரும். அழுத்தமாக இருக்கும் தசைகளை ஓய்வு நிலைக்கு கொண்டு வரும் பணியை செய்வதால், வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்பது தான் இந்த ஆசனத்தின் சிறப்பாகும். இதோ மர்சாரி ஆசனத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பஸ்சிமோத்தாசனா (Paschimottanasana)

இரண்டு கால்களையும் பார்த்தவாறு முன்நோக்கி வளையக் கூடிய பஸ்சிமோத்தாசனம் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளித்து, தலைவலியை விரட்டுகிறது. இரண்டு கால்களையும் நோக்கி முன்நோக்கியவாறு எப்படி வளைப்பது என்பதை இங்கே காணலாம்.

அதோ முகா ஸ்வானாசனா (Adho Mukha Svanasana)

கீழ்நோக்கியவாறான நாய் வடிவ நிலையில் அதோ முகா ஸ்வானாசனத்தைச் செய்யும் போது, இரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு, தலைவலியிலிருந்த நிவாரணம் கிடைக்கிறது. படத்தில் இருப்பது தான் அதோ முகா ஸ்வானாசனாவின் நிலை.

பத்மாசனம் (Padmasana)

மனதை ஓய்வு நிலைக்கு கொண்டு வரவும் மற்றும் தலைவலியை துரத்தவும் பத்மாசனம் என்ற தாமரை வடிவ ஆசனம் உதவுகிறது. இதோ பத்மாசனம் செய்யும் வழிமுசவறையை இங்கு காண்போம்.

சவாசனம் (Shavasana)

ஆழமான யோக ஓய்வுநிலையில் உடலை வைத்திருப்பதன் மூலம் சவாசனம் நம்மை புத்துணர்வு பெறச் செய்கிறது. அசையாமல் சில நிமிடங்களுக்கு படுத்திருப்பது தான் சவாசனம் என்ற யோக நிலையாகும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்பது பற்றி இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த எளிமையான யோகாசன நிலைகளைப் பயிற்சி செய்யும் போது, தலைவலியின் தாக்குதலை சமாளித்திட முடியும், ஏன் ஒரே அடியாக நிறுத்தவும் கூட முடியும். எனவே, தினமும் சிறிது நேரத்திற்கு உங்களுடைய யோகாசன பாயை விரியுங்கள். வாழ்க்கையை வளமாக அனுபவியுங்கள்.

முன்னெச்சரிக்கை

உங்களுடைய மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை அவருடைய ஆலோசனைகள் இல்லாமல் நிறுத்தி விட வேண்டாம். தலைவலிக்கு எதிரான உங்களுடைய போராட்டத்தில் உங்களை வலுப்படுத்துவது தான் யோகாசனமாகும். யோகாசனம் என்பது மருந்தல்ல!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button