ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! தினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்!

ஒருகாலத்தில், ‘பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை.

அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.

இன்று உலகம் முழுக்க உள்ள மக்களை அச்சுறுத்தும் ஒரு உடலாரோக்கிய குறைபாடாக “சர்க்கரை நோய்” அல்லது “நீரிழிவு குறைபாடு” உருவெடுத்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் நாடாக நம் இந்திய நாடு இருக்கப்போவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சர்க்கரை நோயாளிகள் யோகாசனம் செய்வது நல்லது. பயிற்சியின் போது இதயத் துடிப்பு கூடாமலும், சுவாசத்தடை நேரிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக யோகாசனங்களில் பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுக்கிறது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஆசனத்தை செய்வதும் எளிது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்று கூறலாம்.

பஸ்சிமோத்தனம்: செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆண்மை அதிகரிக்கிறது. மலட்டுத் தனம் நீங்குகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறதுயோகாவை செய்யுங்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button