அழகு குறிப்புகள்

இதை செய்யுங்கள்! தினமும் இரவில் தூங்கும் முன் பேஸ்பேக் முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாகும்.

கடலை மாவு – பாசிப்பயறு:
தினமும் இரவில் தூங்கும் முன், 1 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் பாசிப்பயறு மாவுடன் நீர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாகும்.

ghg
கற்றாழை:
கற்றாழை ஜெல்லை வாரம் இருமுறை முகத்தில் பூசி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவினால் முகம் மென்மையாகவும், வெண்மையாகவும் மாறும்.

தக்காளி, பாசிப்பயறு:
இரண்டு நாட்டுத் தக்காளி எடுத்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும். இந்த தக்காளி சாறுடன் பாசிப்பயறு மாவு சேர்த்து கலந்து தினமும் முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெள்ளையாக மாறும்.

முல்தானிமட்டி:
முல்தானிமட்டியுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.


கேரட்:
கேரட்டை மிக்ஸியில் அரைத்து, அந்த சாறுடன் காய்ச்சாத பசும்பால் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பளிச்சென்றும், வெண்மையாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கின் தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த சாறுடன் எலுமிச்சை சாற்றை கலந்து தடவி வர, முகம் பொலிவு பெறும்.

மஞ்சள்:
மஞ்சள் தூளும், தக்காளிச் சாறும் கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு வர, முகம் பளிச்சென்று இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button