34.4 C
Chennai
Monday, May 27, 2024
eredg
ஆரோக்கியம் குறிப்புகள்

இதை பயன்படுத்தி பாருங்கள் ..! கருமையான கூந்தல் வேண்டுமா..?

நம் சமையலறையில் பயன்படுத்தும் கறிவேப்பிலை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்கிறது.

கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால் முடி வளர்ச்சி அதிகமாகும்.

கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும் கூட வளமையாக உள்ளது இதனால் இறந்துபோன தலைசரும தண்டை நீக்கவும் ,பொடுகை தடுக்கவும் இது உதவுகிறது. கறிவேப்பிலை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம்.

வெந்தயம் 2 தேக்கரண்டி , சீரகம் 2 தேக்கரண்டி மற்றும் கறிவேப்பிலை கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும் வெந்தயம் மற்றும் சீரகத்தை ஒரு நாள் முன் ஊறவைக்கவும். நன்கு ஊற வைத்த வெந்தயம் மற்றும் சீரகத்துடன் கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.இதனை தலையில் தடவி 45 பிறகு தலையை அலசவும் வாரம் இருமுறை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
eredg
கறிவேப்பிலை, செம்பருத்திப் பூ மற்றும் மருதாணியை அரைத்து சிறிது சிறிதாக காயவைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தினசரி உபயோகித்து வந்தால் நல்ல பலன் தரும்.

கறிவேப்பிலை பொடியை தினமும் இரண்டு தேக்கரண்டி சாப்பிட வேண்டும் அவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்தோடு தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலைபொடி அல்லது கறிவேப்பிலையை அரைத்து தயிர் கலந்து அரை மணி நேரம் கழித்து தலை குளித்தால் தலைமுடி வளர்ச்சி மேலும் பொடுகு வறட்சி போன்றவை நீங்கும்.

Related posts

இதயத்துக்கு மது நண்பனா, பகைவனா?/DOES DRINKING IS GOOD TO HEART?

nathan

இரவு நேரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியங்கள் என்ன தெரியுமா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் சிறுநீரக பாதிப்பு ஏற்படுதற்கான அறிகுறிகள் என்ன…?

nathan

தெரிந்துகொள்ளுங்கள் ! தினமும் காலையில் 30 நிமிடம் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா புழுங்கலரிசியா? பச்சரிசியா? எது ஆரோக்யத்துக்கு நல்லது.

nathan

கண்டிப்பா கவனியுங்க..! எலுமிச்சை பழத்தோலை தூக்கிவீசுபவரா நீங்க..?

nathan

ஏன் மருதாணி வைக்கிறோம் தெரியுமா? நமக்குக் கிடைக்கிற பலன்கள் என்னென்ன?

nathan

மாதவிடாய் பற்றி பெண்கள் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

nathan

மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan