அசைவ வகைகள்

சூப்பரான முட்டை மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:

முட்டை – 4
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன்
மைதா – ¼ கப்
சோளமாவு – ¼ கப்
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து இட்லி குக்கரில் வேகவைத்து எடுத்து துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மைதா, சோளமாவு, மிளகாய்த்தூள் மூன்றையும் தண்ணீர் விட்டு கலந்து, வெட்டி வைத்துள்ள முட்டையை அதில் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

egg6165685288620752983

மஞ்சூரியன் செய்முறை:

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு – தலா 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தாள் – 1 கைப்பிடி மேலே அலங்கரிக்க
உப்பு – தேவைப்பட்டால் (எல்லா சாஸ்களிலும் உப்பு இருப்பதால்)
மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன்.
செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, அதில், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், அதில், குடைமிளகாய் சேர்த்து சிறிது வதக்கி அதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து கிளறியபின், பொரித்த முட்டையை சேர்த்து தேவையெனில் உப்பு சேர்த்து கடைசியாக மிளகு தூள் மற்றும் வெங்காயத் தாளை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். ஓட்டலில் சாப்பிடுவது போன்ற சுவை இருக்கும். சுவையாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button