கால்கள் பராமரிப்பு

பாத அழற்சியை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்…

மனிதன் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பிரச்சனை என்ற ஒன்று இருக்கும் போது, அதை சரி செய்ய தீர்வும் நிச்சயம் இருக்கும்.அந்த வகையில் காலில் ஏற்படும் டென்டாநிடிஸ் என்ற பாத அழற்சி குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும், அதை சரி செய்ய பின்பற்ற வேண்டிய தீர்வுகள் குறித்தும் காண்போம். பாதத்தின் தசை நாண்களில் ஏற்படும் வீக்கம் அல்லது கட்டி பாத அழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. இது வீக்கம், சிவந்து போதல், எரிச்சல் ஆகியவற்றோடு தொடர்புடைய தீவிர வலி கொண்ட நிலையாகும். பாதத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக இது ஏற்படுகிறது. சில நேரங்களில், இது பொருந்தாத அளவு கொண்ட காலணி, உடல் பருமன், அடிப்பாதத்தில் முள், நீரிழிவு ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்படுகிறது.

எண்ணெய் மசாஜ் சிறிதளவு எண்ணெயை எடுத்து பாதத்தின் வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது நிவாரணம் கிடைக்கிறது. சிறந்த பலன் பெற ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்து கொண்டு அதனை மிதமாக சூடுப்படுத்தி, வலி உள்ள இடத்தில் சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். இவ்வாறு மசாஜ் செய்யும் போது பாதிக்கபட்ட இடத்தை சுற்றியுள்ள இரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது மற்றும் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கிறது. வலி குறையும் வரை இதை தொடர்ந்து பல நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம்.

ஐஸ் பேக் பாதத்தில் பாத அழற்சியால் ஏற்பட்ட வீக்கத்தினை மற்றும் வலியை குறைக்க ஐஸ் பேக்கை பயன்படுத்துவது வீட்டிலேயே செய்ய கூடிய சிறந்த தீர்வாகும். சில ஐஸ் கட்டிகளை எடுத்து நசுக்கி ஒரு பையினுள் போட்டு ஒரு பருத்தி துண்டினை கொண்டு சுற்றி எடுத்து அதனை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் சில நிமிடங்களுக்கு ஒற்றி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது கட்டியும் வீககமும் குறையும். ஒரு முறை தயார் செய்யும் பையை ௧௫ நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். இத்தனை ஒரு நாளில் பல முறை செய்து பாதத்தில் ஏற்பட்டுள்ள வலியை தணிக்கலாம்.656115 3 footcare

வெதுவெதுப்பான நீர் மற்றும் உப்பு பாத அழற்சியை குணப்படுத்த வெதுவெதுப்பான நீரும், உப்பும் சிறந்த துணை புரிகிறது. உப்பு கரைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் பாதத்தினை 10-15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் பாதிக்கப்பட்ட இடத்தின் வலியை ஆச்சரியத்தக்க வகையில் குறைக்கிறது. மேலும் உப்பு நம் உடல் இழந்த மெக்னீசியத்தின் அளவை மீட்டு தருகிறது. பாதம் வறட்சி கொள்வதை தடுப்பதற்காக இந்த முறையை ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இதனை செய்து முடித்த பின் பாதத்தினை ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வினிகர் பாத அழற்சியினால் ஏற்பட்ட வலியையும், வீக்கத்தினையும் குறைக்க வினிகர் சிறந்த துணை புரிகிறது. சூடான மற்றும் குளிர்ந்த வினிகரை கலந்து எடுத்து இப்பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கலாம். நீரையும் வினிகரையும் சம அளவு கலந்து எடுத்து கொண்டு சில நிமிடங்களுக்கு சூடாக்கி பின் ஒரு பருத்தி துணியை அதனுள் மூழ்க செய்து எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். இப்பொழுது சம அளவு வினிகர் மற்றும் குளிர்ந்த நீரை எடுத்து இந்த கரைசலை ஒரு பருத்தி துணியின் உதவி கொண்டு பாதத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். மேற்குறிப்பிட்டவற்றை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து நிவாரணம் பெறலாம். இந்த சிகிச்சையை முடித்த பின் பாதங்களுக்கு ஈரமூட்ட க்ரீம் பயனபடுத்தலாம்.footmassage

மாவு அரிசி அல்லது கோதுமை மாவு மற்றும் ஒயினை கலந்து ஒரு பசையினை தயார் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த பசையை தடவி அப்படியே விட்டு விட்டு 30 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும். பாத அழற்சியினால் அவதியுறும் மக்கள் தரையில் நடப்பது மேலும் இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், தரையில் நடக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

அஸ்பாரகஸ் பொதுவாக பாத அழற்சி பாதத்தினை வீங்க வைக்கும். வீக்கத்தையும் அதிகப்படியான திரவத்தையும் குறைக்க அஸ்பாரகஸ் சிறந்த ஒன்றாகும். அஸ்பாரகஸை பயன்படுத்தும் போது அது தனது இயற்கையாக சிறுநீரை வெளியேற்றும் பண்புகள் மூலம் கூடுதல் நீரை வெளியேற்ற வழி வகுக்கிறது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button