சரும பராமரிப்பு

Tips.. இதை செய்தால் சருமம் பொலிவுபெறும்..!!

நீங்கள் உங்கள் அழகைப் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி செய்தும், சரியான பலன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். இயற்கை தந்த பூக்களை வைத்து உங்கள் முகத்தை மிகவும் பொலிவுடனும், பளபளப்புடனும் வைத்துக் கொள்ளலாம்.

அதற்கான வழிமுறைகளை பற்றி இங்கு காண்போம்.

ரோஜாப்பூ :

ரோஜா இதழ்களைப் பால் சேர்த்து அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் பளபளப்பாக மாறும்.

பன்னீர் ரோஜாவின் இதழ்களுடன், வேப்பிலையை சேர்த்து அரைத்து, அதில் சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.

23204066254ab39ed3214bf66f1b854c5418d6a645835676120082006817

இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.

மல்லிகைப்பூ :

மல்லிகைப்பூவுடன், இலவங்கத்தைச் சேர்த்து அரைத்து, அதில் சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர்விட்டு முகம், கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவினால் சருமம் பொலிவு பெறும்.

தாமரைப்பூ :

தாமரை இதழ்களை சிறிது பால்விட்டு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், சருமத்திற்கு ஒருவித மென்மையைக் கொடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button