இந்த அற்புத பொடி பயன்படுத்தி பாருங்க.. முகம் ஜொலிக்க இழந்த பொலிவை திரும்ப பெறலாம்….

முகம் பளபளன்னு ஜொலிக்க இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அற்புத பொடி ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையானவை
சந்தனம் பொடி – அரை தம்ளர்
பாசிப்பயறு – ஒரு தம்ளர்
உலர்ந்த பன்னீர் இதழ்- மூன்று தம்ளர்
கஸ்தூரி மஞ்சள் – 1 தேக்கரண்டி
கோரைக்கிழங்கு – 50 கிராம்,
மகிழம்பூ பொடி- 50 கிராம்.
வெந்தயம் -25 கிராம்

செய்முறை
முதலில் இவை அனைத்தையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி மிஷினில் அரைத்து பாட்டிலில் வைத்து கொள்ளுங்கள்.

தினமும் குளிக்கும் போது இந்த பொடியுடன் எலுமிச்சை, கற்றாழை, பால், தயிர், தண்ணீர் என்று ஏதாவது ஒன்றை சேர்த்து முகத்துக்கு பயன்படுத்துங்கள்.

இந்தப் பொடியை ஃபேஸ் பேக் போன்றும் பயன்படுத்தலாம்.

பனிக்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என எல்லா காலங்களிலும் இதை பயன்படுத்தலாம்.

சிறு பிள்ளைகள் முதல் ஆண், பெண் அனைவரும் இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply