சரும பராமரிப்பு

முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்கும் பேஸ் பக்…Face pack

முகத்தில் ஏற்படும் சுருக்கம் மனஅழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றாலும் ஏற்படும். இங்கு முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை இயற்கையான வழியில் மாயமாய் மறைய செய்யும் இயற்கை முறையிலான எளிய குறிப்புகளை பற்றிப் பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

இவ்வாறு செய்வதால் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

பால்: காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் முகச் சுருக்கங்கள் மறையும்.

ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறைந்து நல்ல மாற்றம் ஏற்படும்.

முட்டையின் வெள்ளைக்கரு: முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.

பாதாம் ஆயில்: தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குழித்து வர, நாளைடைவில் முகம் பொலிவு பெறும்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் கே, சி போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காயில் சிலிகா என்னும் முக்கியமான பொருளும் உள்ளது. இது சரும சுருக்கங்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

Related posts

இதோ ஈஸியான டிப்ஸ்.. எப்போதும் இளமையாக இருக்க ……

nathan

பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்

nathan

சரும சுருக்கத்தை போக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: