அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்.. இயற்கை முறையிலான சில எளிய அழகு குறிப்புகள்!!

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு சர்க்கரை, சோளமாவு, அனைத்தையும் ஒன்றாக கலந்து பசைபோல ஆனதும் முகத்தில் தடவுவம் காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்துவிடும்.

சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

தலை முடி நன்கு வளர வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிரகு தலைக்கு குளிக்கவேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமம் நிறம் அதிகரிக்க ஆப்பில் விழுது இரண்டு டீஸ்பூன், பால்பவுடர் அரை டீஸ்பூன், பார்லி பவுடர் அரை டீஸ்பூன் மூன்றையும் சேர்த்து கலந்து முகம் கழுத்து, கை வெளியில் தெரியும் பாகம் முழுவதும் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் தோலின் நிறம் மாறி அழகைக்கூட்டும்.
கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போகும்.

Related posts

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் இத செய்யுங்கள்!…

nathan

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால் இத செய்யுங்கள்!….

sangika

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: