அழகு குறிப்புகள் முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்.. முகத்தை பொலிவாக்கும் பாதாம் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்…!!

பாதாம் பருப்பின் மூலமாக நமது முகத்தின் அழகை பராமரிப்பதற்கு நிறைய முறைகள் உள்ளது. சாதாரணமாக நமது வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு நமது முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரக்கூடிய ஒரு பேக் பற்றி இந்தமுறை தெரிந்துகொள்வோம்.

மஞ்சள் உரசும் கல்லில் சிறிது பால் விட்டு, ஒருபாதாம் பருப்பை மெதுவாக உரசும்போது பாதாம் பேஸ்ட், மிகவும் புதிதாக கிடைக்கும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் பேக் போல போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவிட்டு, வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி, காட்டன் துணியை கொண்டு ஒற்றி எடுங்கள்.

மிக எளிமையான, சுலபமான இந்த பேக், மிக விரைவாக தயாரிக்கக் கூடியதும். கண்டிப்பாக பலன்தரக் கூடியதும் ஆகும். கண்களில் கருவளையம் உள்ளவர்கள், கண்களைச்சுற்றி இந்த பேக்கை உபயோகிக்கலாம்.

பாதாம் பவுடருடன் பாலை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் முகத்தை கழுவினால் முகமானது பொலிவு பெரும்.

பாதாம் வைட்டமின் E உள்ளடக்கிய உணவுப்பொருள். இதன் பால் இயற்கையாகவே சருமத்துளைகளை சுத்தம் செய்யும் நற்குணம் கொண்டது.

பாதாம் பவுடர், அரைத்த ஓட்ஸ், காய்ச்சிய பால் ஆகியவற்றை கலந்து முகத்தில் போட்டு பின்னர் ரோஸ் வாட்டரை வைத்து முகத்தை துடைத்து, 20 நிமிடங்கள் கழித்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிசு பெரும்.

பாதாம் பருப்பு, மஞ்சள் தூள், கடலைமாவு ஆகியவற்றை கலந்து மாஸ்க் போல தடவி, பின்னர் 15 நினிடங்கல் கழித்து இளம் சூடுள்ள நீரை கொண்டு கழுவினால் முகமானது பொலிவு பெரும்.

சருமத் துளைகளை சுத்தம்செய்து, வைட்டமின் E செறிந்த ஊட்டச்சத்தினை நமது சருமத்திற்கு தரக்கூடிய இந்த பேக் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.

Related posts

ரோஜா பூவைப் போல மென்மையாகவும் சிகப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க!..

sangika

முகம் வழுவழுப்பாக இருக்க!

nathan

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan
Live Updates COVID-19 CASES