மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா! பழங்கால உணவு ஊட்டச்சத்துக்களின் சொர்க்கமா அல்லது அழிவா?

பாலியோ அல்லது குகை மனிதனின் உணவு என்று பொருள்படும் பாலியோலித்திக் உணவு என்பது நமது மூதாதையர்கள் சாப்பிட்டு வந்த காட்டு தாவரங்கள் மற்றும் விலங்குகளையொட்டிய உணவுகளையே குறிக்கும். தற்போதைய உணவு வகைகளுக்கு மாற்றாக இந்த பழங்கால உணவுகளை சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுவும் நீரிழிவு நோய் (3-ம் வகை), கார்டியோவாஸ்குலார் நோய் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மிகவும் ஏற்றதாக இந்த உணவு உள்ளது.

ஆனால், இது ஊட்டச்சத்துக்களைப் பற்றி யோசிக்காமல், உணவைப் பற்றி யோசிக்கும் வழிமுறை என்ற விமர்சனம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. வழிமுறை எதுவாக இருந்தாலும், இந்த உணவுகளில் சில அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன என்பதில் ஐயமில்லை. எனவே, மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய சில பழமையான உணவுகளை தேடி எடுத்து சாப்பிட்டு, இன்றைய ஆரோக்கியமில்லாத உணவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

ரெட் மீட்
புற்களை சாப்பிடும் அல்லது காடுகளில் துள்ளிக் குதித்து ஓடும் விலங்குகளைச் சாப்பிட வேண்டும் என்று பாலியோ உணவுகளை சாப்பிடுபவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த உணவுகளில் தாவர உணவுகளை விட அதிகமான அளவிற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும், லீன் ரெட் மீட் உணவுகள் புரதம் மற்றும் பிற சத்துக்களின் ஆதாரமாக உள்ளதால் கொழுப்புகளுடன் தொடர்புடைய கார்டியோவாஸ்குலார் நோய் மற்றும் பிற நோய்களை நெருங்க விடாமலும்தவிர்க்க முடியும்.

வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய பழங்கள்
மரங்களில் காய்த்துக் கிடக்கும் கனிகளும், காய்களும் தான் நாடோடி வேட்டையனாக திரிந்து கொண்டிருந்த பழங்கால மனினின் மற்றுமொரு முக்கிய உணவாக இருந்தது. இந்த காய்கள் மற்றும் கனிகளில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றிற்கு குறையொன்றும் இருக்காது. மிகவும் அதிகமான கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால் இரத்தத்தின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து விடும் பலவீனத்தை இவை தடுக்க உதவுகின்றன. அது மட்டுமல்லாமல், ஆக்சிஜன் எதிர்பொருட்கள் நிறைந்துள்ளதால் எண்ணற்ற பிரச்சனைகளில் நாம் சிக்குவதையும் அவை தவிர்க்க உதவுகின்றன. நிறைய பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்கள் உதவுவதால், நமது உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்படுகிறது.

நட்ஸ்
வால்நட் போன்ற நட்ஸ்களை கொண்ட உணவுகளும் பழங்கால உணவுகளுக்கானா பட்டியலில் இடம் பிடிக்கின்றன. மூளையின் முறையான செயல்பாடுகளுக்கும் மற்றும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத நுண் ஊட்டச்சத்துக்களை இந்த நட்ஸ்கள் கொண்டுள்ளன. ஒரு நாளைக்கு 1.5 அவுன்ஸ் அளவிற்கு இவ்வகையிலான நட்ஸ்களை சாப்பிடுவதன் மூலம் LDL அளவையும் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளையும் பெருமளவு குறைக்க முடியும். இவற்றில் நார்ச்சத்துக்களும், ஆக்சிஜன் எதிர்பொருட்களும் மற்றும் பைட்டோநியூட்ரிஷன் ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. மாறாக தாவரங்களில் ஸ்டெரால்களும், கொழுப்புகளும் தான் மிகுந்துள்ளன.
paleodiet

மீன் மற்றும் கடல் உணவுகள்
மீன் மற்றும் கடல் உணவுகளின் மூலம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நாம் எத்தனை முறை யோசித்திருப்போம்? உண்மையில், ஒரு நாளைக்கு 0.5 கிராம் முதல் 1.8 கிராம் வரையில் மீன் மற்றும் கடல் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த வழிமுறையில் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இரத்தம் உறைதல், மாரடைப்பு மற்றும் வலிப்பு போன்ற பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்க முடியும். எனினும், பாலியோ உணவுகளால் இருப்பதால் இவை பண்ணைகளில் விளையாத, காட்டு உணவுகளாகவே கருதப்படுகின்றன.

வேர் காய்கறிகள்
கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஆகிய சத்துக்கள் அடங்கிய கேரட், உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகள் இந்த வகையில் வருகின்றன. இவை பழங்காலங்களில் வேட்டையாடிக் கொண்டிருந்த மனிதர்கள் சேகரித்து வைக்கும் உணவுப் பொருட்களைச் சேர்ந்தவையாக உள்ளன.

பச்சைக் கீரைகள்
ஊட்டசத்துக்களின் உற்பத்தி மையங்கள் என்று கருதப்படும் கீரைகளில் பைட்டோநியூட்ரிஷன் சத்துக்களும், வைட்டமின்களும் மற்றும் தாதுக்களும் உள்ளதால் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சி இவற்றை சாப்பிடுவதால் ஊக்கம் அடைவதை யாராலும் மறுக்க முடியாது. USDA-வின் பரிந்துரைகளின் படி, ஒரு வாரத்திற்கு 3 கோப்பையாவது பச்சைக் கீரைகளை சாப்பிட வேண்டும்.

முட்டைகள்
புரதச்சத்து மிகுந்த உணவாக நன்கு அறியப்பட்டிருக்கும் முட்டையில், மூளையின் செயல்பாடுகளின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான சத்துக்களும் உள்ளன. அது மட்டுமல்லாமல், முக்கியமான வைட்டமின்களை அளிக்கவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்களை வரவழைக்காத வகையில் கொழுப்பின் அளவுகளை கட்டுப்படுத்தவும் முட்டை உதவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button