ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? காதல் நோயின் அறிகுறிகள்!

காதல் என்பதும் ஒருவகை நோய்தான். அந்த நோய் பாதிக்கப்படும்போது மற்ற நோய்களில் உள்ளது போன்று இதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் காதல் நோய்க்கான முக்கிய அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.

  • கைகளில் அதிகம் வியர்க்கும்
  • பசியின்மை அதிகரிக்கும்
  • முகம் உணர்ச்சிக்பெருக்கில் உப்பும்
  • இதய துடிப்பு அதிகமாகும்

இந்த காதலில் பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டத்திலும் உடலில் சில மாற்றங்கள் தோன்றும். அந்த அடிப்படை படிநிலையகள்

காமம் – காமம் என்பது செக்ஸ் ஹார்மோன்களால் தூண்டப்படுகின்றது. செக்ஸ் ஹார்மோனான, டெஸ்டொஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பெண்களின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஈர்ப்பு – இந்தக் கட்டம் காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.

இந்த ஈர்ப்பு கட்டத்தில் monoamines என்று அறியப்படும் நரம்புகள் மூலம் செய்திகளைச் சொல்லும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

Dopamine இது ஒரு வகை ரசாயனம். இது கோக்கெயின் மற்றும் நிக்கோட்டினோரெபின்ப்ரின் என்றவைகளால் தூண்டப்படுகிறது. இதற்கு அட்ரினலின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதுதான் காதலர்கள் உடலில் வியர்வையை உருவாக்குவது, இதயத்தை படபடக்கச் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் பொருள்.

செரொட்டோனின் என்ற மற்றொரு ரசாயனம் காதல் விவகாரத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களில் மிகவும் முக்கியமானது. இதுதான் காதல் வயப்பட்டவர்களை தற்காலிகமாக பைத்திய நிலைக்குத் தள்ளும் வில்லன் .

பற்று , பாசம் – இந்த கட்டம் ஈர்ப்புக் கட்டத்துக்கு அடுத்து ஏற்படுவது. அந்த உறவு நீடிக்கவேண்டுமென்றால் இந்த பற்று மிகவும் அவசியம். ஈர்ப்பு நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளைத் தவிர வேறொன்றும் உற்பத்தி ஆகாது.

இந்தப் பற்று என்பது மேலும் நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறுதிப்பாடு என்று சொல்லலாம். இந்தப் பிணை அல்லது பந்தம்தான் காதலர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்து, அவர்கள் குழந்தைகள் பெற்றெடுக்க உதவுகிறது.

இந்த பற்று கட்டத்தில், இரண்டு ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. நரம்பு மண்டலத்தில் சுரக்கும் இந்த இரு ஹார்மோன்கள் சமூகப் பற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

வேசோப்ரெஸ்ஸின்– நீண்ட கால உறவு என்ற கட்டத்தில் ஒரு முக்கிய ரசாயனம் இது. இந்த ரசாயனம் ஆண்களால் அடக்கப்படும்போது, காதலர்களுக்கிடையே நிலவும் பந்தம் உடனடியாகக் குறைகிறது.

விசுவாசம் இழப்பது, துணைவரை( அல்லது துணைவியை) புதிய காதலர்களிடமிருந்து பாதுகாக்கத் தவறுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன.

Oxytocin என்ற இந்த ரசாயனம் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.

இது காதலர்கள் அல்லது தம்பதியர் இருவர் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் “பாலியல் உச்சகட்ட” நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.

அதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது என்று கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button