மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? மூக்கு, தொண்டை பகுதி வரை சென்ற வைரஸை வெளியேற்றுவது எப்படி?

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் கண்ணன் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை உலகக் முழுவதிலும், உலக சுகாதார அமைப்பின் படி, 465,915 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர். 21,031 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் கண்ணன் கூறியுள்ளார்.அவர், கொரோனா வைரஸ் என்பது மூக்கு வழியாக உடலில் செல்லக்கூடியது. இவ்வாறு மூச்சு காற்றில் கலந்து செல்லும் போது, முதலில் மூக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மூக்கில் அடைப்பு ஏற்படும்.

இந்த அறிகுறி தெரிந்தவுடன் எந்த மூக்கில் அடைப்பு தென்படுகிறதோ, அடுத்த மூக்குத் துவாரத்தை விரலால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, ஆள்காட்டி விரலை அடைப்பு ஏற்பட்டு இருக்கும் மூக்கு மேல் வைத்து அழுத்தாமல், மூச்சை வேகமாக வெளியே விட வேண்டும்.அப்படி வெளியேற்றும்போது ஆள்காட்டி விரலை விட்டு விட்டு அழுத்த வேண்டும். இப்படி அழுத்தும் எண்ணிக்கை ஒரு நொடிக்கு 2 முதல் 4 முறை இருத்தல் அவசியம்.

இதை 1 நிமிட நேரத்திற்கு தொடரலாம். அடைப்பின் தன்மையைப் பொறுத்து கால அளவை நிர்ணயம் இவ்வாறு செய்தால், எடை மிகக் குறைந்து வைரஸ் காற்றின் அழுத்தம் தாங்காமல் மூச்சில் இருந்து வெளியேறிவிடும்.625.0.560.350.160.300.05 4

சீரகம்

இதையும் தாண்டி தொண்டை பகுதிக்கு வைரஸ் சென்றுவிட்டால், தொண்டையில் அரிப்பு எரிச்சல் ஏற்படும். இப்படிப்பட்ட அறிகுறி இருந்தால் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.

இதன் மூலம் வருகிற சாறு எரிச்சல் இருக்கும் இடத்தில் படும்படி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது வைரஸ் தொண்டையில் இருந்து வெளியேறிவிடும்.இப்படி செய்யும் போது தண்ணீர் அருந்துதல், சாப்பிடுதல் கூடாது.

இந்த உத்தியைக் கையாண்டால் வைரஸை ஆரம்பத்திலிருந்தே வெளியேற்றிவிடலாம். இந்த வைரஸ் உடலுக்குள் சென்று விட்டால் அது 14 நாட்கள் தங்கியிருந்து சளித் தொல்லை, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை காட்டும். அதற்கு முன்பு இதை வெளியேற்றி விட்டால் நாம் கொரோனா தாக்கத்திலிருந்து தப்பித்து விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button