மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஒருவருக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை எளிய இரத்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம் ?

மனஅழுத்தம் என்பது பொதுவாக பலரும் தங்கள் வாழ்க்கையில் கடந்து வரும் ஒரு நிலை. அதிக துயரம், அதிக கோபம் போன்றவை பல நேரங்களில் மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால் மனஅழுத்தம் எந்த அளவு இருக்கிறது என்பதை அளவிட முடியுமா? இந்த கேள்வியை முன்னாட்களில் கேட்டிருந்தால் இல்லை முடியாது என்று கூறலாம். ஆனால் தற்போது ஆம் என்று பதில் கூற முடியும். ஆம், மனஅழுத்த அளவை நம்மால் பரிசோதிக்க முடியும். நீங்கள் தொடர்ச்சியாக மனஅழுத்தத்தில் இருந்தால் ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் அதன் அளவை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி? வாருங்கள் இந்த பதிவில் அது பற்றி அறிந்து கொள்வோம்.

நம் உடலில் இருக்கும் மனஅழுத்த ஹார்மோன் கார்டிசோல். இந்த ஹார்மோன் அளவை அளவிடுவதன் மூலம் மனஅழுத்த அளவை அறிந்து கொள்ள முடியும். இதன் மதிப்பு உங்கள் மனஅழுத்த அளவை சொல்லிவிடும். உங்கள் மனம் அதிக அழுத்தத்தில் இருக்கும் போது அல்லது உங்கள் உடலில் எதாவது பய உணர்வு தென்படும் போது அட்ரீனல் சுரப்பியால் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் இந்த கார்டிசோல். இந்த சூழலில் உங்கள் மூளை ஏ.சி.டி.எச் அல்லது அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனை வெளியிடுகிறது. இது அட்ரீனல் சுரப்பிகளை அட்ரினலின் மற்றும் கார்டிசோலை உற்பத்தி செய்ய தூண்டுகிறது.bloodtest stress

கார்டிசோல் மற்றும் மனஅழுத்தம்

உங்கள் உடலில் கார்டிசோல் அளவை அறிந்து கொள்ள கார்டிசோல் அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது உங்கள் உடலின் முக்கிய மன அழுத்த மண்டலம் ஆகும் மற்றும் உங்கள் உடலை அவசர நிலைக்கு தயார்படுத்துவதற்கான ஒரு வழியாகும். அட்ரீனல் சுரப்பி என்பது சிறுநீரகத்திற்கு மேலே காணப்படும் ஒரு சிறிய முக்கோண வடிவ சுரப்பியாகும். இந்த சுரப்பி கார்டிசோல் மற்றும் அட்ரீனலின் போன்றவை உற்பத்தி செய்கிறது.

முக்கிய மண்டலங்கள்

உடலின் முக்கிய மண்டலங்களில் கார்டிசோல் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த மண்டலங்கள் பின்வருமாறு..

* மனஅழுத்த எதிர்வினை

* நோயெதிர்ப்பு மண்டலம்

* நரம்பு மண்டலம்

* தொடர்பு மண்டலம்

* புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உடைக்கப்படுவது

கார்டிசோல் அளவை அளவிட இரத்த பரிசோதனை4 stress 158

நீங்கள் நீண்ட காலம் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டால் கார்டிசோல் இரத்த பரிசோதனை மேற்கொள்ளலாம். நீங்கள் நீடித்த மனஅழுத்தத்தில் இருப்பதை உங்கள் உடல் செயல்பாடுகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்த சோதனை மூலம் உங்களுக்கு அட்டிசன் நோய் (மிகக் குறைந்த கார்டிசோல் அளவு) அல்லது குஷிங் நோய்க்குறி (அதிகரித்த கார்டிசோல் அளவு) இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

கார்டிசோல் பரிசோதனை அறிக்கை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளக் கூடியது என்ன?

உயர்ந்தது முதல் வழக்கமான அளவு கார்டிசோல், உங்களுக்கு உணர்த்துவது..

* உங்கள் பிட்யூட்டரி சுரப்பி கட்டி அல்லது அதிக வளர்ச்சி காரணமாக அதிக ACTH ஐ வெளியிடுகிறது.

* உங்கள் அட்ரீனல் சுரப்பியில் உள்ள ஒரு கட்டியின் விளைவாக கார்டிசோல் அதிகப்படியாக உற்பத்தியாகிறது.

* உங்கள் உடலில் உள்ள வேறு எந்த கட்டிகளுக்கும், கார்டிசோல் உற்பத்திக்கும் தொடர்பு இல்லை.

குறைவானது முதல் வழக்கமான அளவு கார்டிசோல், உங்களுக்கு உணர்த்துவது..

* குறைந்தது முதல் சாதாரண கார்டிசோலின் அளவு அடிசனின் நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது உங்கள் உடலில் கார்டிசோல் உற்பத்தி குறைவாக இருக்கும் போது ஏற்படுகிறது.

* மேலும், உடலில் கார்டிசோலின் உற்பத்தி ஹைப்போபிட்யூட்டரிஸம் என்னும் பாதிப்பை ஏற்படுத்தும்.2 foodsthataregoodforahealthynervoussystem

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button