33.6 C
Chennai
Wednesday, May 22, 2024
625.500.560.350.160. 1
முகப்பரு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பருக்கள் பற்றிய பயம் இனி தேவையில்லை!..

எல்லோருக்கும் வசீகரமான, அழகான முகம் இருக்க வேண்டும் என்பது ஆசைதான். பொதுவாகவே முகத்தில் எந்தவொரு பருக்கள் இல்லாமல் இருந்தாலே அழகாக தோற்றமளிப்பார்கள்.

முக அழகை கெடுப்பது பருக்களே ஆகும். இந்த பருக்கள் வர பல காரணங்கள் உண்டு. ஆண்,பெண் இருவருக்குமே இந்த பிரச்சனை ஏற்படும்.

பருக்கள் ஏன் வருகிறது, வந்தால் என்ன செய்யக்கூடாது, வந்த பருக்களை முற்றிலும் நீக்கி வசீகரமான முகத்தை எப்படி பெறுவது என்பதை எல்லாம் இப்போது பார்ப்போம்.

தலையில் அதிக அளவு பொடுகு, மலச்சிக்கல், எண்ணெய் பசை உள்ள முகம், கிருமித்தொற்று மற்றும் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாய்வு போன்ற பிரச்சனைகளால் பருக்கள் வருகிறது.

முக்கியமாக பருக்கள் வந்தால் அதை தொடாமல், நெருடாமல், கிள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.

இவ்வாறு செய்தால் பருக்கள் அதிகமாக வரக்கூடும். அதுமட்டுமில்லாமல் தோலில் பள்ளம் ஏற்பட்டு முகத்தில் வடுவாக நிலைத்துவிடும்.

எப்பொழுதும் முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அடிக்கடி சுத்தமான தண்ணீரால் முகம் கழுவ வேண்டும்.

மேலும் இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் வியர்வை சுரந்து தோலில் உள்ள நுண்துளைகளின் அடைப்பு நீங்கி முகம் சுத்தமாகிறது.

திருநீற்று பச்சிலையை அரைத்து பருக்கள் மேல் தொடர்ந்து பூசிவர முகத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி பருக்கள் இல்லாமலே செய்துவிடும். இந்த மூலிகை அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.
வெந்நீரில் வேப்பிலைகளை போட்டு ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி இறந்த செல்கள் தளர்ந்துவிடும்.வேப்பிலை ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.
சந்தனம், மிளகு, ஜாதிக்காய் இவைகளை சேர்த்து அரைத்து முகப்பருக்களின் மேல் 10 நாட்கள் தொடர்ந்து பூசிவந்தால் போதும் பருக்கள் வேறோடு மறைந்துவிடும்.
முகப்பரு வந்தால் மேற்கூறிய வீட்டு வைத்தியம் மற்றும் சொன்னவற்றை பின்பற்றினாலே போதும் முகப்பரு பற்றிய பயம் உங்களுக்கு இனி தேவையில்லை!!!

Related posts

முகத்தில் பருக்களின் கருமையான தழும்புகள் இருந்து, அசிங்கமான தோற்றத்தைக் கொடுத்தால் எப்படி மீளலாம்

nathan

ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?

nathan

பிம்பிள் பிரச்சனை… சிம்பிள் தீர்வுகள்!

nathan

வெயில் காலத்தில் முகப்பரு வராமல் எப்படி தடுப்பது?

nathan

முகத்தில் பருக்கள் அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இந்த மாஸ்க்கை போடுங்க…

nathan

எப்படி ரெண்டே நாள்ல விரட்டலாம்…அதுவும் வீட்லயே.. இந்த பருக்களை

nathan

முகப்பருக்களை போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்

nathan

முகப்பரு வடு நீக்க வெந்தயமே சிறந்தது.

nathan

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் முகப்பருவைப் போக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!

nathan