31.7 C
Chennai
Monday, May 27, 2024
தலைமுடி சிகிச்சை

அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

22 1437540863 10 haircare

ஒவ்வொரு பெண்ணுக்கும் அடர்த்தியான, மென்மையான, பளபளக்கும் கூந்தலைப் பெற வேண்டும் என்ற கனவு இருக்கும். அதனால் உங்கள் நண்பர்களின் கூட்டத்தில் பொறாமையை ஏற்படுத்த வேண்டும் என்றால் அழகிய மற்றும் ஆரோக்கியமான கூந்தலை நீங்கள் பெற வேண்டும்.

அழகிய மற்றும் ஆரோக்கியமான கூந்தல் சாதாரணமாக கிடைத்துவிடாது. அதற்கு கூந்தலுக்கு போதிய பராமரிப்புக்களை வழங்க வேண்டும். இங்கு ஆரோக்கியமான கூந்தலுக்கு மேற்கொள்ள வேண்டியவைகளைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

கூந்தலைப் பாதுகாக்கவும்

ஆம், கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமென்றால், பாதுகாப்பு என்பது ஒரு சிறந்த வழியாகும். கடுமையான வெப்பநிலை, சூரிய ஒளி, அழுக்கு மற்றும் மாசு போன்றவைகளில் இருந்து கூந்தலை பாதுகாக்க வேண்டும். உங்கள் தலைச்சருமத்தில் தொற்றுக்கள் ஏற்பட இவைகளே காரணமாக அமையும். இதனால் முடி உதிர்வு, பொடுகு மற்றும் இதர கூந்தல் பிரச்சனைகள் ஏற்படலாம்.

கவனமாக கையாளுங்கள்

குளித்த பிறகு, தலையை உடனே துவட்ட வேண்டாம். இது முடிக்கு பாதிப்பை உண்டாக்கும். ஈரமான முடி வலுவில்லாமல் உடையக்கூடிய வகையில் இருக்கும். அதனால் தலை முடி காயும் வரை காத்திருக்கவும். பின் மெதுவாக கூந்தலை சீவவும்.

கூந்தலை கண்டிஷன் செய்யுங்கள்

கூந்தல் வறட்சியாவதை தவிர்க்க நல்ல கண்டிஷனரை கொண்டு கூந்தலை மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும். கூந்தலை கண்டிஷன் செய்த பின்பு அதனை முழுமையாக அலசவும். பின் நன்றாக காய விடுங்கள்.

ஹேர் ஸ்டைலிங்கை ஒரு பழக்கமாக்கி கொள்ளக்கூடாது

பல ஹேர் ஸ்டைலிங் பொருட்கள் வெப்பத்தை அதிகளவில் உண்டாக்கும். அதனால் இவைகளை சீரான முறையில் பயன்படுத்தி வந்தால் இது கூந்தலை பாதிக்கக்கூடும். அதேப்போல் அதனை அளவுக்கு மீறியும் பயன்படுத்தக் கூடாது. மேலும் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க நல்ல முடி சீரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

கூந்தலை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்க வேண்டும்

உங்கள் ஹேர்பேண்டை எந்தளவிற்கு அதிகமாக சுருட்டி, இறுக்குகிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படும். மாறாக, எப்போது பார்த்தாலும் கூந்தலை கட்டி வைப்பதற்கு பதில் அதனை அவிழ்த்து விடுங்கள் அல்லது கிளிப் பயன்படுத்துங்கள்.

கூந்தலை முற்றிலுமாக சுத்தப்படுத்துங்கள்

முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது பொடுகும், தலைச்சருமத்தில் அரிப்பும். அதனால் வெளியே வரும் போது கூந்தலை அழகாக காட்ட வேண்டுமென்றால், தேவையான சுத்தத்தை பராமரிப்பது அவசியமாகும்.

ஹேர் மாஸ்க் தயார் செய்யுங்கள்

வாரம் ஒரு முறை நல்லதொரு ஹேர் மாஸ்க்கை கொண்டு கூந்தலுக்கு சிகிச்சை அளித்திடுங்கள். இது உங்கள் கூந்தலுக்கு சில முக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கும். ஹேர் மாஸ்க்குகளை தயாரிப்பது மிகவும் சுலபம். ஒரு வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் கொஞ்சம் முட்டையை சேர்த்து, இந்த கலவையை உங்கள் கூந்தலில் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசிடுங்கள்.

சரியான உணவை உண்ணுதல்

நல்ல ஹேர் மாஸ்க் மற்றும் கண்டிஷனரை கொண்டு கூந்தலுக்கு சிகிச்சை அளிப்பது தவிர, நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூலம் சில அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை பெற்றிடுங்கள். சமநிலையுடனான உணவை உண்ணுங்கள். இது உங்கள் கூந்தலை வேகமாக வளரச் செய்யும். மேலும் கூந்தலுக்கு பளபளப்பையும் அளிக்கும்.

கூந்தலுக்கு எண்ணெய் தேயுங்கள்

வாரம் ஒரு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தேயுங்கள். வாரம் ஒரு முறை கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது மிகவும் முக்கியமாகும். இது தலைச்சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தி, கூந்தலை பளபளக்க வைக்கலாம். கூடுதலாக கூந்தல் அடர்த்தியும் பெறும்.

சீரான முறையில் சீவவும்

தலைச்சருமத்தில் உள்ள எண்ணெய் இயற்கையான முறையில் தலை முழுவதும் பரவ, கூந்தலை சீவ வேண்டும். இது கூந்தலுக்கு பளபளப்பை உண்டாக்கும். மேலும் சீவுவதால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, மயிர்கால்களும் வலிமையடையும்.

Related posts

இளநரையை குணப்படுத்தும் துளசி..! இதை முயன்று பாருங்கள்….

nathan

இப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா? அப்ப இத படியுங்க….இனி அந்த கவலை எதுக்கு?

nathan

பேன் தொல்லைக்கு மின்னணு சீப்பு

nathan

கலர் செய்த கூந்தலை பராமரிக்க உதவும் மூன்று சிறந்த வழி!…

nathan

முடி உதிர்தலை தடுக்க கொய்யா இலை டிகாஷன் எப்படி தயாரிக்கலாம்?

nathan

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பொடுகுதொல்லையா? யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க… இரண்டே நாளில் போயிடும்…!

nathan

பளபளப்பான தலை முடிக்கு டிப்ஸ்

nathan

ஹேர்கலரிங் செய்யும் முன்னர் தெரிந்துகொள்ளவேண்டியவை….

nathan