மருத்துவ குறிப்பு

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா? அப்ப கண்டிப்பா இத படிங்க…

கிட்டத்தட்ட 40 மில்லியன் அமெரிக்கர்கள் சைனஸ் நோய் தொற்று அல்லது புரையழற்சியால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகின்றனர். புரையழற்சி என்பது திசு வரிசையில் ஏற்படும் வீக்கம் அல்லது ஒரு தொற்று ஆகும். இது தொற்றை ஏற்படுத்தி சளி உருவாக்கம் அல்லது வலியை உண்டாக்கும்.

பொதுவாக கண்களுக்கு கீழுள்ள பகுதி (sinuses) காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். ஆனால் அப்பகுதியானது திரவங்கள் மற்றும் கிருமிகளால் (பாக்டீரியா, வைரஸ்கள், மற்றும் பூஞ்சை) நிரப்பப்படும் போது, அது தொற்றை விளைவிக்கும். சுவாச தொற்று, ஒவ்வாமை மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு ஆகியவை சைனஸ் ஏற்பட காரணங்கள் ஆகும்.

இப்போது சைனஸ் உள்ளவர்கள் அதனை சரிசெய்ய சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்ப்போம்.

30 1438256398 1 water

நீர்

உங்கள் உடலிலுள்ள வைரஸ்களை வெளியேற்ற போதிய நீரேற்றம் என்பது அவசியம். தினமும் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 8 அவுன்ஸ் தண்ணீர் குடிக்கவும்.

ஆட்டுக்கால் சூப்

நாசி துவாரங்கள் மற்றும் சுவாச அமைப்பு ஆகியவற்றை ஒருநிலைப்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவும் என்பது வழக்கமான தீர்வு ஆகும்.

இஞ்சி

சைனஸ் இருப்பவர்கள், இஞ்சி டீ தயாரித்து அதில் தேன் சேர்த்து குடித்தால் குணமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பூண்டு மற்றும் வெங்காயம்

பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு அதிகரிக்கும்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பு ஊக்கப்படும் மற்றும் புரையழற்சி விரைவில் குணமாகும்.

சர்க்கரை

தொற்றுடன் போராட உதவும் வெள்ளை இரத்த அணுக்களை குறைக்கிறது.

பழச்சாறுகள்

ஆரஞ்சு ஜூசில் வைட்டமின் சி இருந்தாலும் கூட, மற்ற காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது போன்று முழுமையான ஆற்றல் இருப்பதில்லை. எனவே ஜூஸ் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

பால் பொருட்கள்

பால் மற்றும் பிற பால் பொருள்கள் சளியை ஏற்படுத்தும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட மாவு

மற்றும் தானியங்கள் சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் தானியங்களை சைனஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அதிக சளியை உருவாக்கும்.

உப்பு

போதிய தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது உப்பு உடலை வறட்சியடையச் செய்து, சைனஸ் பிரச்சனையை குணமாக்க இடையூறை ஏற்படுத்தும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button