அறுசுவை கேக் செய்முறை

பேரிச்சம்பழ கேக்

பேரிச்சம்பழத்தை பயன்படுத்தி முட்டையில்லாமல் செய்யக்கூடிய சத்தான கேக் இது.

 

தேவையான பொருட்கள்

 • பேரிச்சம்பழம்   –  20 (விதை நீக்கப்பட்டது )
 • மைதா   –  1 கப்
 • பால்  –  3 /4 கப்
 • சர்க்கரை  –  3 /4 கப்
 • சமையல் சோடா  – 1 தேக்கரண்டி
 • எண்ணெய்  –  1 /2 கப்
 • அக்ஹ்ராட்,முந்திரி  –  1 மேசைக்கரண்டி

செய்முறை

 1. பேரிச்சம்பழத்தை பாலில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்(விதை நீக்கப்பட்டபேரிச்சம்பழம்).
 2. வெதுவெதுப்பான பாலில் பேரிச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு  இரவு முழுவதும் ஊற வைக்கவும்(விதையுடன் கூடிய பேரிச்சம்பழம் ).
 3. இதனுடன்  சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 4. இதனுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 5. மைதா, சமையல் சோடா இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
 6. ஒவ்வொரு மேசைகரண்டி மாவு  எடுத்து  அரைத்தவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 7. இறுதியாக அக்ஹ்ராட்,முந்திரி ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
 8. பேக்கிங் பானில் கலவையை ஊற்றி பரப்பவும்.
 9. அவனை 350 F இல்முன்சூடு பண்ணவும்.
 10. பின்னர் இதை 350 Fஇல் 35 – 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும் அல்லது கத்தியை கேக்கில் நுழைக்கும் போது கத்தியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும்.

 

Related posts

சைனீஸ் இறால் வறுவல்

nathan

பாலக் பன்னீர்

nathan

ருசியான நாட்டு கோழி குருமா

nathan

Leave a Comment

%d bloggers like this: