2043ff0e c6eb 42e2 8a99 68bfdec5f09e S secvpf
சரும பராமரிப்பு

பெண்களுக்கு முதுகில் வரும் பருக்களை எப்படி அகற்றுவது?

பருக்களின் தொல்லை அல்லது பிரச்சனை இருப்பவர்களில் 61% பேருக்கு முதுகு மற்றும் மார்பிலும் பருக்கள் ஏற்படும் பிரச்சனை இருக்கிறது. பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்களை விட முதுகு மற்றும் மார்பில் ஏற்படும் பருக்களை அகற்றுவது தான் கடினம்.

சிலர் இதைப்பற்றி வெளியில் கூறுவது இல்லை, சிலர் இந்த முதுகு மற்றும் மார்பு போன்ற இடங்களில் பருக்கள் தோன்றினால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதன் மூலம் எரிச்சல் அல்லது அரிப்பு அதிகமாகும் போதுதான் அவற்றின் மீது அக்கறை எடுக்க ஆரம்பிக்கிறார்கள். முதுகில் பருக்கள் ஏற்படுவதற்கு உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இதற்கொரு முக்கிய காரணமாக இருக்கிறது. முகம், தோள், முதுகு மற்றும் புட்டம் போன்ற இடங்களில் அதிகமாக எண்ணெய் சுரப்பிகள் இருக்கின்றன.

எனவே, தான் இவ்விடங்களில் பருக்கள் அதிகம் ஏற்படுகின்றன என சரும நிபுணர்கள் கூறுகிறார்கள். முகத்தில் ஏற்படும் பருக்களை விட, முதுகில் ஏற்படும் பருக்களை அகற்றுவது சற்று கடினம் என சரும மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இந்த இடங்களில் சருமம் சற்று தடிமனாக இருக்கும். பருக்களுக்கு பொதுவான சிகிச்சை அளித்து சரி செய்ய முடியாது. அவரவர் சரும தன்மையை பொருத்து தான் சிகிச்சையளிக்க வேண்டும். பருக்கள் ஹார்மோன்களின் இயற்கையினால் ஏற்படுவது.

இதை வராமல் தடுக்க முடியாது ஆனால், அதிகமாகாமல் தடுக்கலாம். பருக்கள் ஏற்படும் ஆரம்பக் காலத்திலேயே இதற்கு தீர்வு காணுங்கள். ரெட்டினால் மற்றும் பென்சோல் பெராக்சைடு கிரீம்கள் நல்ல ஆன்டி-பிம்பிள் கிரீம்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். லேசர் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் அதற்கு பிறகு கற்றாழை ஜெல் மற்றும் ஐஸ் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறப்படுகிறது. பருக்களின் காரணமாக சருமத்தில் வடுக்கள் ஏற்படுவது என்பது இயற்கை தான். இதை போக்க “Derma roller”, “Rf pixel”, போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளலாம் என்று சரும மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2043ff0e c6eb 42e2 8a99 68bfdec5f09e S secvpf

Related posts

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சையைக் கொண்டு அழகை அதிகரிப்பது எப்படி?

nathan

பிரகாசமாக முகம் வேண்டுமா? ‘வெள்ளரி ஃபேஸ் பேக்’ முயன்று பாருங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…பெடிக்யூர் செய்ய அழகு நிலையம் அவசியம் இல்லை; இதை செய்தாலே போதும்…!!

nathan

உப்பிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா? இதை முயன்று பாருங்கள்!!

nathan

இதோ உங்களுக்காக எளிய முறைகளில் வீட்டிலேயெ இருந்து சருமத்தைப் பாதுகாப்பதுப் எப்படி

sangika

மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்க

nathan

பால் தரும் பட்டு போன்ற சருமம்

nathan

பஞ்சபூத குளியல்!

nathan