chana sundal
ஆரோக்கிய உணவு

சுவையான கருப்பு சுண்டல் ரெசிபி

சுண்டலில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்திருப்பதால், இதனை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. அதிலும் ஒல்லியாக இருக்கும் குழந்தைகளுக்கு இதனை கொடுப்பது மிகவும் சிறந்தது. இங்கு சுண்டலை குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

அதனைப் படித்து, அதன் படி குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

கருப்பு சுண்டல் – 1 கப்

தண்ணீர் – 3 கப்

தேங்காய் – 1/2 கப் (துருவியது)

கடுகு – 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

வரமிளகாய் – 2

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

கறிவேப்பிலை – சிறிது

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கருப்பு சுண்டலை நீரில் 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

குக்கரில் உள்ள விசிலானது போனதும், அதில் உள்ள நீரை வடித்து, தனியாக சுண்டலை வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்துள்ள சுண்டலை சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட்டு, பின் அதில் துருவி வைத்துள்ள தேங்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 5-6 நிமிடம் கிளறி இறக்கினால், சுண்டல் ரெசிபி ரெடி!!!

Related posts

முருங்கைப்பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பிரியாணி சாப்பிடுவதில் உள்ள சாதக, பாதகங்கள்

nathan

அல்சரை குணமாக்கும் பீட்ரூட்

nathan

பழச்சாறுகளை விட பழங்கள் ஏன் சிறந்தது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

தக்காளி சாலட்

nathan

உடல் வறட்சி அடையாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!

nathan

ஹீரோயின் மாதிரி ஜொலிக்க ‘இந்த’ உணவுகள சாப்பிட்டா போதுமாம்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…உயிரை பறிக்கும் வெல்லம்…இந்த நிறத்தில் இருந்தால் பேராபத்து?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளத்தை மேம்படுத்தும் அற்புத ஜூஸ்!

nathan