39.4 C
Chennai
Tuesday, May 28, 2024
25 3 facemask
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எந்த சருமமாக இருந்தாலும் பயன்தரும் எளிய அழகு குறிப்புகள் !!

எந்த சருமமாக இருந்துாலும் வெளியே கடந்து வந்ததும் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். வெளியே சுற்றுப்புறத்தில் உள்ள அழுக்கு சருமத்தில் படிந்து சருமத்தில் உள்ள நுண்துவாரங்களை அடைத்துவிடும்.

இதை சுத்தம் செய்ய காய்ச்சாத பச்சைப் பாலை பஞ்பல் நனைத்து முகத்தை நன்கு துடைக்க வேண்டும். பிறகு, 10 நிமிடங்கள் கழித்துத் தண்ணீர் கொண்டு லேசாக மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இப்படி செய்தால் சருமம் பளபளப்பாகும். எலாஸ்டிசிட்டி மேம்படும்.

எலுமிச்சை சாறு, கிளிசரின் பிறும் தேன் மூன்றையும் நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் மசாஜ் செய்து கழுவ வேண்டும். சாதாரண சருமத்தினர் இதைப் பின்பற்றலாம்.

சாதாரண சருமத்தினர் கை, கழுத்து பிறும் உடலில் சூரியனால் ஏற்படும் கறுமையைப் போக்க முல்தாணிமெட்டி, டீ டிகாக்ஷன் கலந்து 10 நிமிடங்கள் வைத்துவிட்டுக் கழுவினால், வெயிலினால் ஏற்படும் கறுமை நீங்கும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை முதலில் நன்கு சுத்தம் செய்து கழுவ வேண்டும். பிறகு, முல்தானி மெட்டியுடன், சிறிது பன்னீர் கலந்து பேக் போன்று் முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு காய்ந்ததும், தண்ணீர் தொட்டு மசாஜ் செய்து கழுவலாம். இதனை வாரம் ஒரு முறைதான் செய்ய வேண்டும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் காய்ச்சாத பாலைக் கொண்டு முகத்தைச் சுத்தம் செய்யலாம். அதன் பிறகு பாதாம், கொஞ்சம் காய்ச்சிய பால், சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் மாதிரி அரைக்கவும். இதை பேக்காக முகத்தில் போட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். சருமம் வறண்டுபோகாமலும், சுருக்கம் ஏற்படாமலும் இரண்டுக்க இது உதவும்.

Related posts

சிகப்பழகைத் தரும் குங்குமப் பூ

nathan

எண்ணெய் சருமத்தை தடுப்பது எப்படி?

nathan

உங்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் ஏற்பட கூடிய பருக்களை மறைய செய்யணுமா..?அப்ப இத படிங்க

nathan

சிவப்பு சந்தனத்தை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

இளமையைப் பாதுகாக்க இரவில் போட வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்

nathan

சூப்பர் டிப்ஸ் ! எலுமிச்சை சாற்றினை எதனுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவது பலன் தரும்…!

nathan

முக வசீகரம் தரும் காய்கறிகள்

nathan

இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்……

sangika

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan