32.5 C
Chennai
Sunday, May 19, 2024
19 green capsicum
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

குடைமிளகாயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன. உங்கள் டிஷ்களில் பார்ப்பதற்கு அழகாகவும், கலர் ஃபுல்லாகவும் இருப்பதோடு நல்ல ருசியையும் கொடுக்கிறது குடைமிளகாய்.

அதனால் தான் பெரும்பாலான சைனீஸ் ரெசிபிக்களில் குடைமிளகாய் சேர்க்கப்படுகிறது. அதைப் பச்சையாகச் சாப்பிட்டாலும் சரி, சமைத்துச் சாப்பிட்டாலும் சரி… அது தரும் நன்மைகளுக்கு அளவே இல்லை. இப்போது நம் உடல் ஆரோக்கியத்திற்குக் குடைமிளகாய் அளிக்கும் 7 நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.

செரிமானத்திற்கு…

செரிமானப் பிரச்சனைகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.

நீரிழிவுக்கு…

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது குடைமிளகாய். இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.

வலிகளுக்கு…

குடைமிளகாயில் உள்ல கேயீன் என்னும் வேதிப் பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.

இதயத்திற்கு…

இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து இதய ஆரோக்கியத்தை குடைமிளகாய் அதிகப்படுத்துகிறது. இதய அடைப்பினால் தவிப்பவர்களுக்கும் இது ஒரு அருமருந்தாகும்.

நோயெதிர்ப்புக்கு…

குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கர்வி என்னும் நோயைத் தவிர்ப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் குடைமிளகாய் வல்லது.

முதுகெலும்புக்கு…

குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப் பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்பிற்குச் செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது.

கொழுப்பு குறைவதற்கு…

குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கிறது. குடைமிளகாயைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம்!

Related posts

அல்சரை குணமாக்கும் பீட்ரூட்

nathan

உங்க ஆண்மை அதிகரிக்க இந்த பழச்சாற்றை தவறாம குடிங்க…!!

nathan

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

nathan

தெரிந்துகொள்வோமா? பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்

nathan

சூப்பர் டிப்ஸ்! எப்பவும் அழகா இருக்கணுமா? காய்ச்சாத பாலை இப்படி பயன்படுத்தினாலே போதும் !

nathan

பால் குடித்த பின்பு இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

பல்வேறு சத்துக்கள் வாழைக்காயில்அடங்கியுள்ளது!…

sangika

உடலுக்கு வலுகொடுக்கும், முப்பருப்பு வடை.!

nathan

சுவையான வேர்க்கடலை சட்னி

nathan