men hair 1
தலைமுடி சிகிச்சை

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… தலைமுடி குறித்து ஆண்களின் மனதில் உள்ள சில தவறான எண்ணங்கள்!

தலைமுடி தொடர்பான பல தவறான எண்ணங்கள் மக்களிடையே உள்ளன. இது ஒரு பெரிய விஷயம் இல்லை. தலைமுடியை எத்தனை முறை வெட்டுகிறார் என்பது முதல் தலைமுடிக்கு ஷாம்பு போடுவது வரை, பல்வேறு தவறான தகவல்கள் மக்களிடையே உள்ளன. இதனால் ஒருவரால் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது கடினமாக உள்ளது.

இந்த தவறான எண்ணங்களை தொடர்ந்து நம்பிக் கொண்டு பின்பற்றி வந்தால், அது மயிர்கால்களை கடுமையாக சேதமடையச் செய்துவிடும். கீழே தலைமுடி தொடர்பான சில பொதுவான கட்டுக்கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து கொண்டால், தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

ஹேர் ஜெல் தலைமுடியை உதிரச் செய்யும்

ஹேர் ஜெல்லிற்கும், தலைமுடி உதிர்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆம், தலைமுடிக்கு ஹேர் ஜெல்லைப் பயன்படுத்தும் போது, அது தலைமுடியை உலர வைத்து மெல்லியதாக காட்சியளிக்குமே தவிர, எந்த வகையிலும் தலைமுடி உதிர்தலுக்கு வழிவகுக்காது.

ஆண்களுக்கு கண்டிஷனர் தேவையில்லை

எந்த ஒரு முடி நிபுணரிடம் சென்றாலும், அவர்கள் உங்களிடம் தலைமுடிக்கு அவசியம் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டுமென கூறுவார்கள். தலைமுடியில் உள்ள அழுக்குகளைப் போக்க ஷாம்பு சிறந்த பொருளாக இருந்தாலும், தலைமுடி நல்ல ஊட்டச்சத்துடன் மென்மையாக வளர கண்டிஷனர் உதவுகிறது. சொல்லப்போனால் கண்டிஷனர் தலைமுடி சேதத்தைக் குறைப்பதற்கான பயன்படுத்தப்படுகிறது. எனவே அச்சமின்றி கண்டிஷனரை ஆண்களும் பயன்படுத்தலாம்.

மன அழுத்தம் முடியை நரைக்க வைக்கும்

இந்த எண்ணம் பெரும்பாலானோரின் மனதில் இருக்கும் ஒன்று என்றே கூறலாம். உண்மையில் தலைமுடி நரைப்பதற்கு காரணம், தலைமுடி அதன் நிறத்தை உருவாக்கும் திறனை இழந்தது தான். அதனால் தான் நரை முடி வரத் தொடங்குகிறது. மன அழுத்தம் இதற்கு எந்த வகையிலும் காரணமல்ல. அதோடு இதற்கு எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லை. மன அழுத்தம் வேண்டுமானால் தலைமுடி உதிர்தவற்கு வழிவகுக்குமே தவிர, அதனால் தலைமுடியின் நிறத்தை மாற்ற முடியாது.

முடி வெடிப்பை சரிசெய்யலாம்

முடியின் முனைகளில் உள்ள வெடிப்புகளை மாயமாக சரிசெய்ய முடியாது. நீங்கள் தொடர்ச்சியாக தலைமுடியில் சூடான கருவிகள் அல்லது கனமான ஹேர் ஸ்டைலர்களைப் பயன்படுத்தினால், முடியின் பாதுகாப்பு லேயர் விலகிவிடும்.

தலைக்கு குளிக்கும் முன் தலைமுடிக்கு எண்ணெயை வைத்து குளித்த பின், ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தினால், இந்த செயல்முறையை மெதுவாக்கலாம். முடி வெடிப்புகளுக்கு மிகச்சிறந்த ஒரு தீர்வு என்றால், அது பிளவடைந்த முடியின் முனைகளை வெட்டுவது தான்.

ட்ரை ஷாம்பு கூட நல்லது

ட்ரை ஷாம்பு தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச உதவுகிறது மற்றும் முடிக்கு உலர்ந்த தோற்றத்தை தருகிறது. தலைமுடியை அலசுவதற்கு நேரம் எடுக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் சாதாரண ஷாம்புக்கு மாற்றாக ட்ரை ஷாம்புவைப் பயன்படுத்துகிறார்கள்.

ட்ரை ஷாம்பு சில நேரங்களில் சிறந்ததாக இருக்கும். ஆனால் எப்போதுமே இதைப் பயன்படுத்துவது தலையில் அழுக்குகளை வேகமாக சேரச் செய்யும். இறுதியில், பாரம்பரிய ஹேர் வாஷை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை.

வறண்ட தலைச்சருமத்திற்கு பொடுகு என்று பொருள்

உங்கள் ஸ்கால்ப்பில் செதில்செதிலாக தோல் உதிர்கிறதா? இப்படி இருந்தால், நாம் பெரும்பாலும் அதை பொடுகு என்று தான் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் தலையில் செதில்செதிலாக இருந்தால், அது தலையில் அழுக்கு அதிகமாகவும், குறைவான ஈரப்பதமும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இம்மாதிரியான நேரங்களில், தலைக்கு பழுப்பு நிற சர்க்கரையை ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தேய்க்க வேண்டும். இதனால் தலையில் ஏற்படும் அரிப்பு குறைவதோடு, தலைமுடிக்கு மசாஜ் செய்வது போன்றும் இருக்கும்.

Related posts

உங்களுக்கு தலை முழுதும் பொடுகா? இதோ விரைவில் போக்கும் இயற்கை வைத்தியங்கள்!!

nathan

மிருதுவான கூந்தல் கிடைக்கனுமா? ரோஜா இதழ் தெரபி யூஸ் பண்ணுங்க!!

nathan

தேங்காய் பாலைக் கொண்டு எப்படி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்

nathan

முடி நுண் பவுடர் / டெக்ஸ்ச‌ர் பவுடரினால் ஏற்படும் 12 அற்புதமான‌ நன்மைகள்

nathan

முடியின் வேர்கால்களில் ஏற்படுகிற நீர்க்கட்டிகளுக்கு சூப்பர் டிப்ஸ்…….

nathan

உங்களுக்கு தெரியுமா நரை முடி வர நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் தான் காரணம்!

nathan

பொடுகு தொல்லையை போக்கும் கற்றாழை

nathan

சோப்பு, ஷாம்பூ பயன்படுத்துபவரா? இதோ உடலுக்குள் உட்புகும் ரசாயனம்

nathan

தலைமுடி உதிர்வதை தடுக்கும் எண்ணெய் மசாஜ்

nathan