30.6 C
Chennai
Saturday, May 18, 2024
22 21 kele ka ko
அழகு குறிப்புகள்

சூப்பரான …வாழைக்காய் கோப்தா

சிலர் ஆடி மாதத்தில் விரதம் இருப்பார்கள். அப்படி விரதம் இருப்பவர்கள், விரதத்தை முடிக்கும் போது, பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் ஏதாவது ரெசிபி சமைத்து சாப்பிட நினைத்தால், வாழைக்காய் கோப்தா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் ஈஸியான, அதே சமயம் சுவையான ரெசிபியும் கூட.

இங்கு அந்த வாழைக்காய் கோப்தா ரெசிபியின் ஈஸியான செய்முறை உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

கோப்தாவிற்கு…

வாழைக்காய் – 3 (வேக வைத்து தோலுரித்தது)
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து தோலுரித்தது)
இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

கிரேவிக்கு…

இஞ்சி பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி சாறு – 1/4 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை மாவு – 1 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – 1 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கோப்தாவிற்கு கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெயைத் தவிர, அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதறகு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி சேர்த்து வதக்கி, அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அதில் தக்காளி சாற்றினை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கடலை மாவை சேர்த்து கிளறி, வாணலியில் ஊற்றி கிளறி, அடுத்து பொரித்து வைத்துள்ள கோப்தாக்களை சேர்த்து 4-5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், வாழைக்காய் கோப்தா ரெடி!!!

Related posts

கணவருடன் மோசடி வழக்கில் சிக்கிய சன்னி லியோன்..நீதிமன்றம் உத்தரவு!

nathan

கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வந்த பொலிஸ் அதிகாரி! தங்க கழிப்பறை… தங்க படிக்கட்டு!

nathan

எப்படி கைகளை சுத்தம் செய்வது?….

sangika

சூப்பரான கை வைத்தியம்!

nathan

அழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான சீக்ரெட்..

nathan

அழகா இருக்கணுமா? பெண்கள் காலை முதல் இரவு வரை கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இதோ…

nathan

சுவையான பாலக்கீரை கோதுமை தோசை

nathan

நீங்களே பாருங்க.! மகன் ராணுவ வீரனாக வந்த போது மீன் விற்கும் தாய் செய்த செயலைப் பாருங்க…

nathan

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

nathan