33.6 C
Chennai
Wednesday, May 22, 2024
25 celery chutney
சட்னி வகைகள்

சுவையான செலரி சட்னி

பலருக்கு செலரி கீரையை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக அந்த கீரையை எப்படி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம். செலரி கீரையை காலையில் தோசை, இட்லி, சாதம் போன்றவற்றிற்கு ஏற்றவாறு அதனை சட்னியாக செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைத்தவாறு இருப்பதுடன், காலையில் விரைவில் சமைத்தவாறும் இருக்கும்.

சரி, இப்போது அந்த செலரி கீரை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Celery Chutney
தேவையான பொருட்கள்:

செலரி கீரை – 1/2 கட்டு
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கடுகு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செலரி சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைக்க வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, சட்னியில் இருந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், செலரி சட்னி ரெடி!!!

Related posts

கத்தரிக்காய் சட்னி

nathan

நார்த்தங்காய் பச்சடி

nathan

சுட்ட கத்திரிக்காய் சட்னி

nathan

புதுமையான முள்ளங்கி சட்னி!!

nathan

சுவையான பசலைக்கீரை ரெய்தா

nathan

தக்காளி – பூண்டு சட்னி

nathan

சூப்பரான முட்டைக்கோஸ் சட்னி

nathan

சுவையான சத்தான கேரட் சட்னி

nathan

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி

nathan