27.8 C
Chennai
Saturday, May 18, 2024
azhaipoo pakoda. L styvpf
சிற்றுண்டி வகைகள்

சுவையான வாழைப்பூவில் பக்கோடா

வாழைப்பூவில் பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வாழைப்பூ – 1
வெங்காயம் – 1
மோர் – 1 கப்
கடலை மாவு – 1 கப்
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – தேவைக்கு
சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவைக்கு
எண்ணெய், தண்ணீர் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாழைப்பூவை சுத்தப்படுத்தி பொடிதாக நறுக்கி மோரில் போட்டு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் கடலை மாவு, சோள மாவு, பெருஞ்சீரகம், மிளகாய் தூள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் உதிரியாக பிசைந்துகொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். சூப்பரான வாழைப்பூ பக்கோடா ரெடி.

Related posts

மிளகு வடை

nathan

பீட்ரூட் ராகி தோசை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா

nathan

வீட்டிலேயே பீட்சா…!

nathan

காஷ்மீரி கல்லி

nathan

தினை உப்புமா அடை

nathan

கற்பூரவள்ளி இலை பஜ்ஜி

nathan

தக்காளி – கார்ன் புலாவ்

nathan

முளயாரி தோசா

nathan