33.9 C
Chennai
Saturday, May 11, 2024
tytyt 1
அறுசுவைஇனிப்பு வகைகள்

தீபாவளி சூப்பரான சோன்பப்டி

சுவையான சோன் பப்டியை, தீபாவளி ஸ்பெஷலாக வீட்டிலேயே ஈஸியாக செய்து சாப்பிடலாம். சோன் பப்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 1/2 கப், மைதா – 1 1/2 கப், பால் – 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 2 1/2 கப், ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன், தண்ணீர் – 1 1/2 கப், பாலிதீன் ஷீட் – 1, நெய் – 250 கிராம்.

செய்முறை: ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும். பின் அதனை குளிர வைக்க வேண்டும்.
tytyt 1
அதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். அந்த பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும்.

பின் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு குளிர வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் கரண்டியை வைத்து கிளற வேண்டும். அவ்வாறு கிளறும் போது நீளநீளமாக மாவானது சுருளும். அதுவும் குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளற வேண்டும்.

பின் அதனை அந்த தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பவுடரைத் தூவி, குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை சதுர வடிவத் துண்டுகளாக்கி, பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து, சுற்றி வைக்க வேண்டும். சூப்பரான சோன் பப்டி ரெடி

Related posts

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala ,tamil samayal kurippu

nathan

குலோப் ஜாம் எளிமையான செய்முறை

nathan

காளான் dry fry

nathan

ருசியான அவல் கார பொங்கல்!….

sangika

சுவையான மிளகு ஜின்ஜர் சிக்கன்

nathan

ஆப்பிள் ஜூஸ்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

nathan

உருளைக்கிழங்கு ஜிலேபி

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா எப்படிச் செய்வது?

nathan