32.8 C
Chennai
Sunday, May 19, 2024
18 green gram masala
சைவம்

சுவையான பச்சை பயறு மசாலா

பெரும்பாலான பேச்சுலர்கள் தங்கள் ரூம்களில் சாம்பார் தான் செய்து சாப்பிடுவார்கள். ஏனெனில் அது ஒன்று தான் அவர்கள் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். ஆனால் சாம்பாரைப் போலவே பச்சை பயறு மசாலாவும் பேச்சுலர்கள் செய்து சாப்பிடும் அளவில் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும்.

இங்கு பேச்சுலர்கள் செய்து சாப்பிடும் அளவில் ஈஸியாக இருக்கும் அந்த பச்சை பயறு மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Spicy Green Gram Masala Recipe
தேவையான பொருட்கள்:

பச்சை பயறு – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது)
பூண்டு – 1-2 (நறுக்கியது)
தக்காளி – 1 (அரைத்தது)
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பச்சை பயறை நீரில் 2-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து குறைவான தீயில் 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 1-2 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, குக்கரில் உள்ள பச்சை பயிறை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மத்து கொண்டு மசித்தால், பச்சை பயிறு மசாலா ரெடி!!!

Related posts

கீரை தயிர்க் கூட்டு

nathan

உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

nathan

தயிர்சாதம் & ஃப்ரூட்

nathan

சூப்பரான கொண்டைக்கடலை குருமா

nathan

சுவையான… பீட்ரூட் பொரியல்

nathan

தேங்காய் சாதம்

nathan

அப்பளக் குழம்பு

nathan

வடை கறி

nathan

பஞ்சாப் உருளைக்கிழங்கு

nathan