26 chicken ghee r
அசைவ வகைகள்

சூப்பரான சிக்கன் நெய் ரோஸ்ட்

சிக்கன் நெய் ரோஸ்ட் ஒரு மங்களூர் ரெசிபி. இந்த ரெசிபியானது உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஏற்றது. ஏனெனில் இந்த ரெசிபியானது முற்றிலும் நெய்யால் செய்யப்படுவதால், இதில் கலோரிகளானது அதிக அளவில் இருக்கும். மேலும் இது குளிர்காலத்தில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட.

பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த மங்களூர் ரெசிபியான சிக்கன் நெய் ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Chicken Ghee Roast Recipe: A Mangalorean Delicacy
தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கெட்டியான புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
அரைத்த தக்காளி – 1 கப்
நெய் – 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/2 கப் (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி, பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின் மூடியைத் திறந்து, அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5-6 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!

Related posts

சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்பு

nathan

காரம் தூக்கல்… மட்டன் க்ரீன் கறி… ருசி அதைவிட தூக்கல்!

nathan

மொச்சை நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

சுவையான கிராமத்து மீன் குழம்பு

nathan

சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி

nathan

கிராமத்து கருவாட்டு குழம்பு செய்முறை

nathan

முந்திரி சிக்கன் கிரேவி

nathan

நெத்திலி மீன் வறுவல்

nathan

பிரியாணி மசாலா மீன் வறுவல்

nathan