jilebi 1
சிற்றுண்டி வகைகள்இனிப்பு வகைகள்

சுவையான ஜிலேபி,

 

 

தேவையான பொருட்கள்

மைதா மாவு – ஒரு கப்

பட்டை – ஒரு துண்டு

ஏலக்காய் – 2

ரோஸ் வாட்டர் – சிறிது

பேக்கிங் பவுடர் – கால் தேக்கரண்டி

பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி

ஃபுட் கலர் – சில துளிகள்

சர்க்கரை – 2 கப்

எண்ணெய் – பொரிக்க

செய்முறை

மைதா மாவுடன் ஃபுட் கலர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து தேவையான நீர் விட்டு (கெட்டியாகவோ, அல்லது நீர்க்கவோ இருக்கக்கூடாது) கலந்து 4 மணி நேரம் வைக்கவும்.

புளித்த பின் மாவின் பதத்தை சரிபார்க்கவும். பிழிந்து விடும் பதத்தில் இருக்கவேண்டும்.

மாவு புளித்த பின் ஒரு கெட்சப் பாட்டிலில் ஊற்றியோ அல்லது ஒரு ஜிப் லாக் பேக்கில் ஊற்றியோ தயாராக வைக்கவும்.

சுகர் சிரப் செய்ய ஒரு கப் நீர் விட்டு சர்க்கரை சேர்த்து ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கம்பி பதம் வந்ததும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலந்து வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் ஜிலேபியாக பிழியவும்.

முக்கியமாக எண்ணெயின் சூடு, சிறிது மாவை விட்டதும் மேல் எழும்பி வரும் பதத்தில் இருக்கவேண்டும்.

அதிக சூடாக இருந்தாலோ, சூடு குறைவாக இருந்தாலோ ஜிலேபி ஜிலேபியாக வராது.

இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய விட்டு சூடான சிரப்பில் போடவும்.

சிரப்பில் 5 நிமிடம் ஊறினால் போதும். மாலத்தீவு முறையில் செய்த ஜிலேபியா தயார்.

Related posts

பேப்பர் ரோஸ்ட் தோசை

nathan

இனிப்பு பொங்கல் எப்படி செய்வது? இதோ….

nathan

மும்பை ஸ்பெஷல் தவா புலாவ் செய்வது எப்படி

nathan

சுவையான சத்தான பாலக் சப்பாத்தி

nathan

சாக்லேட் செய்வது எப்படி?

nathan

சுவையான பிரெட் - அவல் சப்பாத்தி

nathan

தீபாவளி ரெசிபி வேர்க்கடலை லட்டு

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அச்சு முறுக்கு

nathan

இஞ்சி துவையல்!

nathan