22 kadai mutton
அசைவ வகைகள்அறுசுவை

சூப்பரான மட்டன் கடாய்

தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/4 கிலோ
தக்காளி – 2 (நறுக்கியது)
வெங்காய பேஸ்ட் – 1/4 கப்
பூண்டு பேஸ்ட் – 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் – 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 தயிர் – 1/4 கப்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 2 எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பச்சை மிளகாயை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காய பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, பின் வறுத்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பும் சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 15-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, பச்சை மிளகாயை சேர்த்தால், மட்டன் கடாய் ரெடி!!!

Related posts

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

Super tips.. மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்

nathan

சூப்பரான சிக்கன் நெய் ரோஸ்ட்

nathan

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு…

nathan

முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan

மொறு மொறுவென்ற கோழி நக்கட்ஸ்

nathan

சிக்கன் தோசை செய்வது எப்படி?

nathan

வெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )

nathan