30.5 C
Chennai
Monday, May 27, 2024
mutton vada
அசைவ வகைகள்

சுவையான மட்டன் வடை

இதுவரை மட்டனைக் கொண்டு குழம்பு, குருமா, வறுவல், சுக்கா என்று செய்து சுவைத்திருக்கலாம். ஆனால் மட்டன் வடை செய்து சுவைத்ததுண்டா? ஆம், மட்டனைக் கொண்டும் வடை செய்யலாம். மேலும் மட்டன் வடையானது அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் ருசியாக இருக்கும்.

சரி, இப்போது அந்த மட்டன் வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Mutton Vadai Recipe
தேவையான பொருட்கள்:

மட்டன் – 100 கிராம்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

மட்டன் நன்கு வெந்த பின்னர், மட்டனில் தண்ணீர் அதிகம் இருந்தால், தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு வெந்த மட்டனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததம், அரைத்து வைத்துள்ள மட்டனை வடை போல் தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மட்டன் வடை ரெடி!!!

Related posts

செட்டிநாடு இறால் குழம்பு

nathan

மட்டன் சுக்கா வறுவல்

nathan

வெங்காய இறால்

nathan

ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல்

nathan

சுவையான இறால் சுக்கா மசாலா

nathan

வான்கோழி குழம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா ஸ்பேஷல் மட்டன் கிரேவி செய்வது எப்படி????

nathan

மட்டன் லிவர் மசாலா

nathan

சுவையான… முட்டை தொக்கு

nathan