கை வேலைகள்பொதுவானகைவினை

சில்வர் வால் ஹேங்கிங்

தேவையானவை:

பழைய செய்தித்தாள்

டூத்பேஸ்ட் பாக்ஸ்

சில்வர்நிற பேப்பர்

சிவப்புநிற ரிப்பன் லேஸ்

சிறிய செயற்கை ரோஜாக்கள்

பெவிக்கால்

கத்தரிக்கோல்

செய்முறை:

 

swh 1

மேற்சொன்ன தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

swh 2

உங்களுக்கு எந்த அளவிற்கு வால் ஹேங்கிங் செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு செய்தித்தாளை கிழித்து எடுத்துக் கொள்ளவும். பேப்பர் என்பதால் தடிமனாக செய்தால் தான் நன்கு வழுவாக இருக்கும். ஒரு பேப்பரை எடுத்து இரண்டாக கிழித்து அதிலும் பாதி எடுத்து முதலில் ஏதாவது ஒரு பக்கத்தினை மெல்லியதாக இரண்டு முறை மடக்கிக் கொள்ளவும். அதனை அப்படியே நெருக்கமாக சுருட்டவும்.

 

swh 3

நன்கு சுருட்டி குச்சி போன்று கொண்டுவர வேண்டும். கடைசியாக பேப்பர் முடியும் இடத்தில் பெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.

 

swh 4

இதைப்போல் 12 குச்சிகள் செய்து எடுத்துக் கொள்ளவும்.

 

swh 5

பிறகு சில்வர்நிற பேப்பரை செய்து வைத்திருக்கும் பேப்பர் குச்சிகளின் நீளத்திற்கேற்றவாறு இரண்டு செ.மீ அகலத்தில் 12 பேப்பர்கள் நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

 

swh 6

பேப்பர் குச்சிகளின் மேல் இந்த சில்வர்நிற பேப்பரை கம் தடவி ஒட்டி விடவும். முதலில் 6 குச்சிகளை மட்டும் சமமான இடைவெளியில் அடுக்கிக் கொள்ளவும்.

 

swh 7

அதன் மேல் மீதமிருக்கும் 6 குச்சிகளை சமமான இடைவெளியில் வைத்து பெவிக்கால் கொண்டு ஒட்டி விட்டு நன்கு காய விடவும்.

 

swh 8

பழைய பேஸ்ட் டப்பாக்கள் போன்று ஏதாவது ஒரு டப்பாவை எடுத்து கொள்ளவும். அதை இரண்டாக நறுக்கி எடுத்து கொண்டு அதில் ஒரு டப்பாவில் மட்டும் சில்வர்நிற பேப்பரை சுற்றிலும் ஒட்டி வைத்துக் கொள்ளவும்.

 

swh 9

அதை செய்து வைத்திருக்கும் ப்ரேமில் கீழ் பகுதியில் படத்தில் உள்ளது போல் ஒட்டிவிட்டு நன்கு காயவிடவும்.

 

swh 10

 

காய்ந்ததும் எடுத்து அதன் ஓரங்களில் மட்டும் சிறிய ரோஜா பூக்களை ஒட்டி அலங்கரிக்கவும். அந்த பாக்ஸின் நடுவில் சிவப்பு நிற ரிப்பனைக் கொண்டு அழகிய போவ் போல செய்து பெவிக்கால் வைத்து ஒட்டி காயவிடவும்.

 

swh 11

பின்னர் அதில் சில பூங்கொத்துக்களை வைத்து அலங்கரிக்கவும். மிகவும் எளிமையாக செய்யக்கூடிய அழகிய சில்வர் வால் ஹேங்கிங் தயார். சில்வர்நிற பேப்பர் பதிலாக கிப்ட் பேப்பரிலும் இந்த வால் ஹேங்கிங் செய்யலாம்.

Related posts

உடலில் மஹந்தி அலங்காரம்

nathan

எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் – 1

nathan

ரிப்பன் எம்பிராய்டரி

nathan

பேப்ரிக் பெயிண்டிங் பூக்கள் வரைவது எப்படி?

nathan

மெஹந்தி டிசைன்ஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க… வீட்டிலேயே சுலபமாக முகக்கவசம் தயாரிப்பது எப்படி?

nathan

Paper Twine Filigree

nathan

இலகு மகந்தி டிசைன் போடுதல்

nathan

பேஷன் ஜுவல்லரி ( கை வங்கி ) செய்வது எப்படி?

nathan