27.5 C
Chennai
Friday, May 17, 2024
tomato2
ஆரோக்கிய உணவு

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

தக்காளி ஒரு உணவின் சுவையை அதிகரிக்கும் ஒரு அற்புதமான மூலப்பொருள். இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. தக்காளி சாஸ், தக்காளி சூப் மற்றும் தக்காளி சாறு உட்பட பல வழிகளில் தக்காளியை உட்கொள்ளலாம். அன்றாட சமையலில் தக்காளியும் இன்றியமையாதது. தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இத்தகைய தக்காளியை தொடர்ந்து, சரியான முறையில் உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது.வெறும் வயிற்றில் தக்காளி சாப்பிடுவது நல்லதல்ல என்று பலரும் கூறுகிறார்கள்.காலை வெறும் வயிற்றில் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இன்றைய காலகட்டத்தில் நோயெதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை நாம் அனைவருமே அறிவோம். ஆகவே பலரும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தக்காளி பெரிதும் உதவும். ஏனெனில் தக்காளி உடலில் உள்ள வைட்டமின் சி குறைபாட்டை பூர்த்தி செய்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடித்து, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துங்கள்.

கண் பார்வை மேம்படும்

கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பச்சை காய்கறிகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் கண் பார்வையை அதிகரிக்க தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி சாப்பிடுவதால், தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ பார்வை பிரச்சனையைப் போக்கி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உடல் எடையைக் குறைக்கும்

யாரெல்லாம் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறார்களோ, அவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடல் எடை வேகமாக குறைவதோடு, சில நாட்களிலேயே உடல் எடை குறைந்திருப்பதை நன்கு காணலாம். இது தவிர தக்காளி ஜூஸ் குடிப்பது சருமத்திற்கும் நல்லது. நிபுணர்களின் கூற்றுப்படி, தக்காளியில் தோலில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

வயிற்று சூடு

வயிற்றில் உஷ்ண பிரச்சனையை நீங்கள் சந்தித்தால், எதையும் சாப்பிட தோன்றாது. நீங்களும் இம்மாதிரியான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடியுங்கள். இதனால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும் மற்றும் நாள் முழுவதும் நன்றாக உணர்வீர்கள். அதோடு தக்காளியை சாப்பிட்டால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

சருமத்திற்கு நல்லது

தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதுவும் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸை ஒருவர் குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவோடும் பளிச்சென்றும் ஜொலிக்கும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்கும்

வயிற்றில் புழு பிரச்சனையால் ஒருவர் அவதிப்பட்டு வந்தால், ஒரு தக்காளியை வெட்டி, மிளகுத் தூள் சேர்த்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களில் வயிற்று புழு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இதயத்திற்கு நல்லது

தக்காளியை தினமும் சாப்பிடுவது இதயம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்க உதவும். அதுவும் தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் தடுக்கப்பட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் குறையும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…கெட்ட கொழுப்பு நம் உடலில் தங்குவதை தடுக்க இதைச் சாப்பிட்டா போதும்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவுகள் என்னென்ன?

nathan

சீத்தாப் பழத்தில் இல்லாத சத்தா?

nathan

உங்களுக்கு தெரியுமா தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா? அப்ப இத படிங்க.

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் காலையில் ஆப்பிள்சிடர் வினிகர் குடிப்பதால் என்ன நடக்கும்னு தெரியுமா?

nathan

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

nathan

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

கொளுத்தும் வெயில் உடல் சூட்டை தணிக்கனுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan