32.8 C
Chennai
Sunday, May 19, 2024
24 spicy chicken masala curry
அசைவ வகைகள்

சிக்கன் கிரீன் கிரேவி:

தேவையானவை:
சிக்கன் – 130 கிராம்
கிரீன் கறி பேஸ்ட் – 30 கிராம்
பச்சை மிளகாய் – 3
பூண்டு நறுக்கியது – 10 கிராம்
மிளகு – காரத்திற்கு ஏற்ப
அஜினமோட்டோ – சுவைக்கு ஏற்ப
அடர்த்தியான தேங்காய் பால் – 60 மி.லி
துளசி இலை – 3 இலைகள்
எண்ணெய் – 10 மி.லி
உப்பு – தேவையான அளவு
க்ரீன் கறி பேஸ்ட் தயாரிக்க:
கலங்கல் (galangal) – 15 கிராம் (இது இந்தொனேசியா இஞ்சி)
பச்சைமிளகாய் – 30 கிராம்
சின்ன வெங்காயம் – 15 கிராம்
லெமென் கிராஸ் – 5 கிராம்
ப்ரான் பேஸ்ட் – 15 கிராம் (ஷ்ரிம்ப் சாஸ் என்று எல்லா டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும் )
பூண்டு – 15 கிராம்
எலுமிச்சை சாறு – ஒன்றில் பாதி

செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக் கொள்ளவும்.அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும் . அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் மிளகு ,,பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி ,அரைத்த கீரின் கறி பேஸ்ட், பூண்டு, சிக்கன் துண்டுகள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.இத்துடன் உப்பு,மிளகு,அஜினமோட்டோ சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கி 2 நிமிடம் கொதிக்கவிட்டு, துளசி இலைகளை தூவிப் பரிமாறவும்.
24 spicy chicken masala curry

Related posts

தக்காளி ஆம்லெட்

nathan

மட்டன் சுக்கா செய்வது எப்படி?

nathan

தக்காளி மீன் வறுவல்

nathan

ப்ரைடு சிக்கன்

nathan

பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு!!

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பாஸ்தா

nathan

சிக்கன் ப்ரை / Chicken Fry

nathan

மட்டன் சுக்கா

nathan

கணவாய்ப் பொரியல்

nathan