33.3 C
Chennai
Saturday, May 18, 2024
palakchicken 1617184974
அசைவ வகைகள்

சுவையான பாலக் சிக்கன்

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 350 கிராம்

* பாலக் கீரை – 300 கிராம்

* ஓமம் – 1 டீஸ்பூன்

* நெய் – 2 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 6 பல்

* ஏலக்காய் – 2

* பட்டை – 2 இன்ச்

* கிராம்பு – 3

* இஞ்சி – 2 இன்ச்

* பச்சை மிளகாய் – 2

* வெங்காயம் – 2 (நறுக்கியது)

* மிளகாய் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* பிரஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்பpalakchicken 1617184974

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாலக் கீரை, பச்சை மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் உடனே குக்கரின் விசிலை எடுத்துவிட்டு திறக்க வேண்டும். இதனால் பாலக் கீரை நிறம் மாறாமல் பச்சை பசேலென்று இருக்கும்.

* பாலக் கீரை நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ஓமம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அதன் பின் சிக்கனை சேர்த்து, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் வாணலியை மூடி வைத்து, குறைவான தீயில் சிக்கனை நன்க வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிக்கன் வேகும் அளவு சிறிது நீர் சேர்த்து சிக்கனை வேக வைத்துக் கொள்ளலாம்.

* இறுதியில் அரைத்த பாலக் கீரை மற்றும் பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பாலக் சிக்கன் தயார்.

Related posts

பட்டர் சிக்கன்

nathan

குடைமிளகாய் சிக்கன் கிரேவி

nathan

மட்டன் பிரியாணி,பிரியாணி, மட்டன், மட்டன் பிரியாணி

nathan

உருளைகிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்

nathan

சூப்பரான மட்டன் குடல் குழம்பு

nathan

மட்டன் கபாப் : செய்முறைகளுடன்…!​

nathan

சூப்பரான பசலைக்கீரை பக்கோடா

nathan

பட்டர் ஃபிஷ் ஃப்ரை | Butter Fish Fry

nathan

நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு

nathan