27.3 C
Chennai
Sunday, May 19, 2024
201604191146328727 Dark neck simple natural tips for you SECVPF
சரும பராமரிப்பு

கழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள்

முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.

கழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள்
சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ…

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் – இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம்.
201604191146328727 Dark neck simple natural tips for you SECVPF

Related posts

20 நிமிடங்களில் கழுத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி வீடியோ? (Video)

nathan

வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள் || waxing after skin irritating clear tips

nathan

தோல் தொடர்பான பிரச்சனைகள்!…

nathan

Useful tips.. சரும பிரச்சனைக்கு தீர்வு தரும் துளசி!

nathan

அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

nathan

தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்

nathan

உங்களுக்கு மின்னும் சருமம் வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

ஒரே இரவில் முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்.

nathan

உடலிற்கு புத்துணர்வை தர இந்த எண்ணெய்களை வாரம் 1 முறை உபயோகிக்கலாம்.!!

nathan