27.8 C
Chennai
Saturday, May 18, 2024
Bajra Dhahi Vada10
சிற்றுண்டி வகைகள்

கம்பு தயிர் வடை

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு – 300 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
தயிர் – 4 கப்
சீரகத் தூள் – 4 டீஸ்பூன்
பெரிய வெங்காயத்துருவல் – 1 கப்
கொத்தமல்லி – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை:

கம்பு மாவுடன் அரிசி மாவைச் சேர்த்து, உப்பு கலந்து மசால் வடை பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் பச்சை மிளகாய், சீரகத்தூளை சேர்த்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். தயிரை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து அதில் கலக்கவும். இதில் அவித்த கம்பு வடைகளை ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பிளேட்களில் பரிமாறும் முன், வெங்காயத்துருவல், கொத்தமல்லித் தழையை தூவி விடவும். கோடை காலத்திற்கேற்ற சத்தான டிபன், உடலுக்கு குளிர்ச்சி தரும். அனைத்து வயதினருக்கும் உகந்தது. கம்பங்கூழ் பிடிக்காத குழந்தைகள் கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.Bajra%20Dhahi%20Vada10

Related posts

சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி

nathan

சத்தான சம்பா கோதுமை ரவை அடை

nathan

புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ

nathan

சிவப்பு அரிசி கொழுக்கட்டை

nathan

சுவையான சத்தான கம்பு புட்டு

nathan

வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல்!

nathan

வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை!

nathan

சுவையான வெண்டைக்காய் பக்கோடா

nathan

முட்டை பணியாரம்!

nathan