1 mushroom makhani 1661522710
சமையல் குறிப்புகள்

சுவையான காளான் மக்கானி

தேவையான பொருட்கள்:

* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* தக்காளி – 4 (அரைத்தது)

* காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* க்ரீம் – 1/2 கப்

* கசூரி மெத்தி/காய்ந்த வெந்தயக் கீரை – 1 டேபிள் ஸ்பூன்

* காளான் – 200 கிராம் (நறுக்கியது)

* தண்ணீர் – தேவையான அளவு

* கொத்தமல்லி – ஒரு கையளவு1 mushroom makhani 1661522710

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

Mushroom Makhani Recipe In Tamil
* பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அதன் பின் காளனை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து, தேவையான அளவு நீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் கசூரி மெத்தி, க்ரீம், கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி 1 நிமிடம் கழித்து இறக்கி, மேலே வெண்ணெயை சேர்த்து கிளறினால், சுவையான காளான் மக்கானி தயார்.

Related posts

சூப்பரான பஞ்சாபி சன்னா மசாலா இருந்தால் குழந்தை கூட இன்னொரு சப்பாத்தி கேட்கும்

nathan

சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன்

nathan

சுவையான கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

nathan

சுவையான கேரளா ஸ்டைல் வெஜ் சொதி

nathan

பாலுடன் இந்த இரண்டு பொருளை கலந்து குடித்தால் போதும்! சூப்பர் டிப்ஸ்

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika

பிரட் பாயாசம்

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

சுவையான கடாய் காளான் கிரேவி

nathan