30.3 C
Chennai
Saturday, May 18, 2024
15 1434357691 7harmfuleffectsofpesticidesinfruitsandvegetables
மருத்துவ குறிப்பு

காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் – அதிர்ச்சி!!!

முன்பெல்லாம் இயற்கையான முறையில் பயிரிட்டு விவசாயம் செய்து நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்றைய அறிவியல் உலகம், வர்த்தக லாபத்திற்காக உணவுப் பொருளின் நிறம், அளவு போன்றவற்றை மேம்படுத்த, பளபளப்பாகவும், கெட்டுப்போகமலும் இருப்பதற்காக நிறைய இரசாயனங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணத்தினால், நமக்கே தெரியாது நமது உடலில் நாள்பட, நாள்பட நிறைய எதிர்மறை மாற்றங்களும், உடல்நலக் குறைவும், நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இது, அவரவர் வயதிற்கு ஏற்ப உடல்நலத்தில் தாக்கங்கள் ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் வேதனையை ஏற்படுத்தும் செய்தி.

இனி, காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் அபாய விளைவுகள் குறித்துப் பார்க்கலாம்…

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

பல ஆய்வுகளின் முடிவுகளில், பூச்சிக்கொல்லி பயன்படுத்தித் தயாரிக்கும் காய்கறிகளை உண்ணும் குழந்தைகளுக்கு, அவர்களது உடலின் உள் பாகங்களின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு

முக்கியமாக, பூச்சிக்கொல்லி அடிக்கப்படும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகள் மிகவும் குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிறு சிறு குறைபாடுகள் நிறைய ஏற்படுகிறது.

முக்கியமாக பார்வை

முன்பெல்லாம், அறுவது, எழுவது வயதை தாண்டினால் தான் கண் பார்வை குறைபாடு ஏற்படும். ஆனால், இன்றோ ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளே போதிய ஊட்டச்சத்து இன்றி பார்வைக் குறைபாடினால் பாதிக்கப்படுகின்றனர்.

கர்ப்பிணி பெண்கள்

பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்டு தயாரிக்கப்படும், பாதுகாக்கப்படும் உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், அது கருவை பாதிக்கும் என்றும். இதனால், கருவில் வளரும் குழந்தைக்கு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நினைவாற்றலை பாதிக்கும்

தொடர்ந்து நெடுங்காலமாக பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்டு வந்தால், நினைவாற்றல் குறைபாடு, மூளையின் செயல்திறன் குறைபாடு, மூளையில் சேதம் ஏற்படுதல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

அதிகமாக பூச்சிக்கொல்லி

அடிக்கபப்டும் உணவுப் பொருள்கள் கீரை வகைகள், உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளரிகள், பச்சை பீன்ஸ், காலிபிளவர், தக்காளி, சர்க்கரைவள்ளி, கத்திரிக்காய், ப்ராக்கோலி, காளான் மற்றும் குளிர்காலத்தில் ஸ்குவாஷ் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் தான் அதிகம் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது.

ஆர்கானிக் காய்கறிகள்

பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகள் தான் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமாக குழந்தைகளுக்கு. எனவே, முடிந்த வரை காய்கறிகள் வாங்கும் போது, உழவர் சந்தை போன்ற இடங்களில் சென்று வாங்குங்கள். கண்ணாடி சுவர்களுக்குள் விற்கப்படும் பெரும்பாலான காய்கறிகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க, கூடுதலாக பதப்படுத்தி வைக்க இரசாயனங்கள்

15 1434357691 7harmfuleffectsofpesticidesinfruitsandvegetables

Related posts

ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகமுள்ளது….

sangika

தெரிஞ்சிக்கங்க… உங்கள் நகங்களில் இப்படி தென்பட்டால் உயிருக்கே ஆபத்து!

nathan

சர்க்கரையை வெல்லலாம் ஸ்வீட் எஸ்கேப் – 4

nathan

தெரிந்துகொள்வோமா? வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்…

nathan

வயிற்றுகோளாறை சரிசெய்யும் சுக்குமல்லி பானம்

nathan

பன்றிகாய்ச்சலிருந்து பாதுகாப்பபை பெற கைமருந்து!…

sangika

தெரிஞ்சிக்கங்க…வயிற்றுப் போக்கை குணப்படுத்த இந்த ஒரே ஒரு பழம் போதும்!

nathan

அதிகமான டென்சன் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யுமாம் – அதிர்ச்சி தகவல்!

nathan

ஆண் எப்ப‍டி இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவார்கள்

nathan