28.3 C
Chennai
Saturday, May 18, 2024
201610011123369971 Nauli and Uddiyana Bandha SECVPF
உடல் பயிற்சி

ஆண்மையை அதிகப்படுத்தும் ஆசனம்

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.

ஆண்மையை அதிகப்படுத்தும் ஆசனம்
குறிப்பாக தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்வர்களுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் குறைந்து போய்விடுகிறது. இவர்கள் அதிலிருந்து மீண்டுவர உதவுகிறது உட்டியாணா ஆசனம். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகம் மிகவும் பொலிவாக காணப்படும்.

செய்முறை:

விரிப்பில் அரை அல்லது ஒரு அடி இடைவெளி விட்டு கால்களை விரித்து நிற்கவும். இரண்டு கைகளையும் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதியை மட்டும் முன் பக்கமாக சிறிது குனியும் படி வளைக்கவும். இப்படி இருக்கையில் வயிற்று பகுதியில் இறுக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். மேலும் சுவாசப் பைகளில் நிரம்பியிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியில் விடவும்.

இப்போது வயிற்றை உள்ளுக்குள் இழுத்து எக்கவும். இதே நிலையில் ஐந்து அல்லது பத்து விநாடிகளுக்கு அப்படியே நிறுத்தி, பிறகு மூச்சை மெதுவாக இழுத்தவாறு வயிறை தளர்த்தவும். பிறகு நிமிர்ந்து, சாதாரண மூச்சை இரண்டு மூன்று தரம் இழுத்து விட்டு மறுபடி மேற்சொன்னது போல் திரும்பவும் செய்யவும். ஆரம்ப நிலையிலேயே படத்தில் உள்ளவாறு செய்ய வருவது கடினம். ஆனால் முடிந்த அளவு முயற்சிக்கவும். சிறிது முயற்சியுடன் தினம் தினம் செய்து வந்தால் ஒரு கட்டத்தில் சரியாக செய்ய வந்து விடும்.

முழுதாக செய்ய முடியவில்லை என்றாலும், செய்த வரையும் பலன் உண்டு. பொதுவாக யோகாசனங்களை செய்ய தொடங்குபவர்கள் உணவில் கொழுப்பு சத்து கலந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவது நல்லது.

பலன்கள் :

உட்டியாணா ஆசனத்தை தொடர்ந்து செய்து வரும் போது, மலச்சிக்கல், அசீரணம், வாய் துர்நாற்றம், பலவீனம் ஆகியவை விலகும். இடுப்பு சதைகள் வலுவடையும். இனவிருத்திக் கோளங்கள், அது தொடர்பான தாதுப்பை போன்ற உறுப்புகள் ஆரோக்கியமடையும். ஆண்மை மிகுதிப்படும். குறிப்பாக ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இது நல்ல பலனை தரும். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், வயிற்றில் புண் இருப்பவர்கள் (அல்சர்) இருதய பலவீனம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.201610011123369971 Nauli and Uddiyana Bandha SECVPF

Related posts

30 வயதை நெறுங்கும் பெண்களின் சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் வயிற்றுப் பகுதியில் த‌சைகள் வலுவாகும்

nathan

உடற்பயிற்சி

nathan

“எக்ஸ்ட்ரா சதையை எளிதில் குறைக்கலாம்!”

nathan

வயிற்று கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சிகள்

nathan

இடுப்பின் பக்கவாட்டுத் தசையை குறைக்கும் ஸ்டிக் பயிற்சி

nathan

பிராணாயாமத்துக்கான எளிய பயிற்சிகள்

nathan

இளமையில் உடற்பயிற்சி முதுகுத்தண்டை வலிமைப்படுத்தும்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு இரண்டு விதமான உடற்பயிற்சிகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

உடற்பயிற்சியின் போது ஆண்கள் செய்யும் சில தவறுகள்

nathan