28.3 C
Chennai
Saturday, May 18, 2024
201610061420451553 village style fish curry SECVPF
அசைவ வகைகள்

சூப்பரான கிராமத்து மீன் குழம்பு

வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. இப்போது கிராமத்து ஸ்டைலில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான கிராமத்து மீன் குழம்பு
தேவையான பொருட்கள் :

மீன் – 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)
நல்லெண்ணெய் – தேவைக்கு
கடுகு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 1 கப் (துருவியது)
சின்ன வெங்காயம் – 10

வறுத்து அரைப்பதற்கு…

வரமிளகாய் – 8-10
தனியா – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை :

* மீனை சுத்தம் செய்து வைக்கவும்.

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைத்து சூடு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.

* பின் அதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடம் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

* குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி.201610061420451553 village style fish curry SECVPF

Related posts

இறால் தொக்கு

nathan

மிளகு மீன் மசாலா

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika

பட்டர் சிக்கன் மசாலா

nathan

காரைக்குடி நண்டு மசாலா

nathan

காரைக்குடி கோழி குழம்பு செய்முறை விளக்கம்

nathan

சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

nathan

கணவாய் மீன் பொரியல்

nathan

வீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்யலாம் வாங்க!

nathan